தமிழகம்

குற்ற வழக்குகளில் சாட்சியளிக்க ஆஜராகாத விசாரணை அதிகாரிகளுக்கு பிடிவாரன்ட்: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை

செய்திப்பிரிவு

சென்னை: குற்ற வழக்​கு​களில் சாட்​சி​யளிக்க ஆஜரா​காத புலன் விசா​ரணை அதி​காரி​களுக்கு பிடிவாரன்ட் பிறப்​பிக்க வேண்​டுமென்ற தனி நீதிப​தி​யின் உத்​தர​வுக்கு உயர் நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்ளது.

தன்​னை​யும், தனது குடும்​பத்​தா​ரை​யும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கட்​டப்​பஞ்​சா​யத்து செய்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி பழவேற்​காட்டை சேர்ந்த ராஜ்கமல் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தி்ல் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த நீதிபதி பி.வேல்​முரு​கன், மனு​தா​ரர் அளித்த புகாரை சட்​டப்​படி பரிசீலித்து வழக்​குப்​ப​திவு செய்​து, இறுதி அறிக்கை தாக்​கல் செய்​ய​வும், மனு​தா​ரர் குடும்​பத்​தினருக்கு உரிய பாது​காப்பு வழங்​க​வும் பழவேற்​காடு போலீ​ஸாருக்கு கடந்த 2024-ம் ஆண்டு நவம்​பரில் உத்​தர​விட்​டிருந்​தார்.

ஆனால், போலீ​ஸார் இந்த உத்​தரவை அமல்​படுத்​த​வில்லை என கூறி ராஜ்கமல் தாக்​கல் செய்த நீதி​மன்ற அவம​தி்ப்பு வழக்கு நீதிபதி பி.வேல்​முரு​கன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவு அமல்​படுத்​தப்​பட்டு விட்​ட​தாக காவல்​துறை தரப்​பில் அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டது. அந்த அறிக்​கையை ஏற்ற நீதிப​தி, வழக்​கி்ல் சாட்​சி​யளிக்க நீதி​மன்​றத்​தில் ஆஜரா​காத புலன் விசா​ரணை அதி​காரி​களுக்கு எதி​ராக பிடி​வாரன்ட் பிறப்​பிக்க வேண்​டுமென கீழமை நீதி​மன்​றங்​களுக்கு ஏற்​கெனவே உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. அதில், நீதி​மன்ற அவம​திப்பு வழக்​குக்​கும், தனி நீதிப​தி​யின் இந்த உத்​தர​வுக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை.

எனவே, தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்ய வேண்​டும் என கோரப்​பட்​டிருந்​தது. இந்த மேல்​முறை​யீட்டு வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வுக்கு இடைக்​காலத்​தடை விதித்​து, மேல்​முறை​யீட்டு வழக்கு விசா​ரணையை 4 வாரங்​களுக்கு தள்ளி வைத்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT