தமிழகம்

தமிழக பாஜக 2024-ல் தவறவிட்ட கூட்டணியால் டெல்லியில் இன்று பெரும்பான்மைக்காக கதவை தட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது: அர்ஜுனமூர்த்தி கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பாஜக 2024-ல் தவற​விட்ட கூட்​ட​ணி​யால், இன்று டெல்​லி​யில் பெரும்​பான்​மைக்​காக பிறகட்​சிகளின் கதவைத் தட்​டும்சூழல் உரு​வாகி உள்​ள​தாக பாஜக தன்​னார்​வத் தொண்டு நிறுவன பிரி​வின் மாநில அமைப்​பாளர் இரா.அர்​ஜுனமூர்த்தி தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2024 மக்​கள​வைத் தேர்​தலில் தமிழகத்​தில் திமுக தலை​மையி​லான கூட்​டணி 39 தொகு​தி​களை​யும் கைப்​பற்றி முழு​மை​யான வெற்றி பெற்​றது.

திமுக கூட்​டணி 46.97 சதவீத வாக்​கு​களைப் பெற்​றது. தனித்​தனி​யாகப் போட்​டி​யிட்ட அதி​முக கூட்​டணி 23.05 சதவீத வாக்​கு​களை​யும், பாஜக தலை​மையி​லான என்​டிஏ கூட்​டணி 18.28 சதவீத வாக்​கு​களை​யும் பெற்​றன. அதி​முக - என்​டிஏ கூட்​டணி தேர்​தலுக்கு முன்பே உரு​வாகி இருந்​தால் மொத்த வாக்கு வங்கி 41.33 சதவீத​மாக இருந்​திருக்​கும்.

மேலும், தரு​மபுரி, கோவை, கள்​ளக்​குறிச்​சி, சேலம், நாமக்​கல், திருப்​பூர் ஆகிய 6 தொகு​தி​களில் இக்​கூட்​ட​ணிக்கு நேரடி வெற்றி வாய்ப்பு இருந்​திருக்​கும். குறிப்​பாக கோவை தொகுதி பாஜக வேட்​பாளர் அண்​ணா​மலை தீவிர​மான களப்​பணி​யின் மூலம் 4,50,132 வாக்​கு​களை பெற்​றார். அதே தொகு​தி​யில் அதி​முக 2,36,490 வாக்​கு​களைப் பெற்றது.

தலைமுறையின் அரசியல்

இவ்​விரு வாக்​கு​களை​யும் சேர்த்​தால், அது திமுக பெற்ற வாக்​கு​களை​விட ஒரு லட்​சத்​துக்​கும் மேல் அதி​க​மாகும். தனிப்​பட்ட அரசி​யல் எழுச்சி என்​பது கூட்​டணி பலத்​தோடு இணை​யும்​போது​தான் அது முழு​மை​யான வெற்​றி​யாக மாறும் என்​ப​தற்கு கோவை ஒரு சிறந்த உதா​ரணம்.

இந்​தக் கூட்​டணி மூலம் குறைந்​த​பட்​சம் 15 தொகு​தி​கள் வரை கடும் போட்​டியை உரு​வாக்​கி​யிருக்க முடி​யும். அது தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு தமிழகத்​திலிருந்து ஒருவலு​வான நாடாளு​மன்​றப் பிர​தி​நி​தித்​து​வத்​தைப் பெற்​றுத் தந்​திருக்​கும். தமிழகத்​தில் இந்த வாய்ப்பு நழு​வியது மாநில அளவில் மட்​டுமல்​லாமல், டெல்லி அரசி​யலிலும் எதிரொலித்​துள்​ளது.

பெண்​கள் இட ஒதுக்​கீட்டு சட்​டத்தை அமல்​படுத்​து​வது, எதிர்​கால தொகுதி மறு​வரையறை போன்ற முக்​கிய தேசிய விவ​காரங்​களில் ஒரு​மித்த கருத்தை உரு​வாக்க வலு​வான பெரும்​பான்மை அவசி​யம். தமிழகத்​திலிருந்து வலு​வான ஆதரவு கிடைத்​திருந்​தால், இன்று டெல்லி அரசி​யல் சூழல் மற்​றும் நாடாளு​மன்ற விவாதங்​களின் தரம் இன்​னும் ஆக்​கப்​பூர்​வ​மாக இருந்​திருக்​கக்​கூடும்.

ஆனால், டெல்​லி​யில் பெரும்​பான்​மைக்​காக பிற கட்​சிகளின் கதவைத் தட்​டும் சூழல் இன்று உரு​வாகி உள்​ளது. தமிழகத்​தில் முன்பே சரி​யாக எடுக்​கத் தவறிய அரசி​யல் முடிவு, ஒரு தேர்​தலை மட்​டுமல்ல, ஒரு தலை​முறை​யின் அரசி​யல் திசையையே மாற்​றக்​கூடும் என்​பதை இவை உணர்த்​தி​யுள்​ளன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT