தமிழகம்

திருப்பூரில் பணியாற்றும் புதுவை, கேரளம், அசாம் வாக்காளர்களுக்கு ஏப். 9-ம் தேதி விடுமுறை

ஊதியத்துடன் வழங்க தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவு

செய்திப்பிரிவு

திருப்பூர்: ​திருப்​பூரில் பணி​யாற்​றும் புதுச்​சேரி, கேரளம், அசாம் மாநில வாக்​காளர்​களுக்கு ஏப்​ரல் 9-ல் ஊதியத்துடன் விடு​முறை அளிக்க வேண்​டும் என்று தொழில​கப் பாது​காப்பு அதி​காரி​கள் உத்தரவிட்டுள்​ளனர்.

இதுகுறித்து தொழில​கப் பாது​காப்பு மற்​றும் சுகா​தார இணை இயக்​குநர்-1 வேலுமணி, இணை இயக்​குநர்-2 சபீனா ஆகியோர் வெளி​யிட்​ட அறிக்கை​யில் கூறி​யுள்​ள​தாவது: திருப்​பூர் மாவட்​டத்​தில் உள்ள தொழிற்​சாலைகள், கட்​டு​மான நிறு​வனங்​கள், பொதுத்​துறை நிறு​வனங்​கள், நிதி நிறு​வனங்​கள் ஆகிய​வற்​றில் புதுச்​சேரி, கேரளம், அசாம் மாநிலங்களைச் சேர்ந்​தவர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

          

இதில், வாக்​குரிமை உள்ள தினக்​கூலி, தற்​காலிக மற்​றும் ஒப்​பந்த தொழிலா​ளர்​கள் உள்​ளிட்ட அனைத்து தொழிலா​ளர்​களுக்​கும், அவர்​களின் சொந்த தொகு​தி​களுக்​குச் சென்று வாக்​களிக்க ஏது​வாக அந்த மாநிலங்​களின் தேர்​தல் நாளான ஏப்​ரல் 9-ம் தேதி மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டத்​தின்​படி ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பு வழங்​கப்பட வேண்​டும்.

அந்த மாநிலத் தொழிலா​ளர்​களுக்கு வாக்​குப் பதிவு நாளான ஏப்​ரல் 9-ம் தேதி ஊதி​யத்​துடன் விடுமுறை அளிக்​காத தொழிற்​சாலைகள் மற்​றும் கட்​டு​மான நிறு​வனங்​கள் தொடர்​பாக புகார் அளிக்கலாம்.

இதற்கு ஏது​வாக தொழில​கப் பாது​காப்பு மற்​றும் சுகா​தார இயக்​ககம் சார்​பில் மாவட்ட அளவில் கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, இதுதொடர்​பாக புகார்​கள் ஏதேனும் இருப்​பின் திருப்​பூர் மாவட்ட கட்​டுப்​பாட்டு அதி​காரி​களான துணை இயக்​குநர் 1 சந்​தோஷ், துணை இயக்குநர் 2 ஜெய​முரு​கன், துணை இயக்​குநர் 3 கார்த்​தி​கேயன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT