பணி நியமனம் பெற்றவர்களின் உறவினர்களைப் பார்த்து முதல்வர் உற்சாகமாக அன்பை வெளிப்படுத்தினார். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

401 மின்வாரிய பணியாளர்களுக்கு நியமன ஆணை: முதல்வர் விஜய் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்​பிஎஸ்சி மூலம் மின்​வாரி​யத்​துக்​குத் தேர்வு செய்​யப்​பட்ட 401 உதவி பொறி​யாளர்​கள் மற்​றும் உதவி கணக்கு அலு​வலர்​களுக்கு பணி நியமன ஆணை களை முதல்​வர் விஜய் வழங்​கி​னார்.

தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) நடத்​திய ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி​கள் தேர்வு (நேர்​காணல் இல்​லாத பதவி​கள்) மூலம் மின்​சார வாரி​யத்​துக்கு 383 உதவி பொறி​யாளர்​களும் (மின்​னியல்), 18 உதவி கணக்கு அலு​வலர்​களும் அண்​மை​யில் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

அவர்​களுக்கு பணி நியமன ஆணை வழங்​கும் விழா, சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் விஜய் கலந்​து​ கொண்டு 401 பேருக்​கும் தனித்​தனியே பணி நியமன ஆணை​களை வழங்​கி​னார்.

முதலா​வ​தாக கர்ப்​பிணி ஒரு​வருக்கு அவரின் இருக்​கைக்கே சென்று பணி நியமன ஆணையை முதல்​வர் வழங்​கி, அதன்​பின் மேடைக்​குச் சென்று ஒவ்​வொரு​வருக்​கும் பணி நியமன ஆணை​களை வழங்​கி​னார்.

சிலருக்கு முதுகில் தட்​டிக்​கொடுத்து வாழ்த்து தெரி​வித்​தார். ஏறத்​தாழ 45 நிமிடங்​கள் மேடை​யில் நின்​ற​வாறு அனை​வருக்​கும் பணிநியமன ஆணை​களை முதல்​வர் வழங்​கியதற்கு கூட்​டத்​தில் இருந்​தவர்​கள் கரவொலி எழுப்பி பாராட்டு தெரி​வித்​தனர்.

மின்மாற்றிகள் சீரமைப்பு

முன்​ன​தாக, எரிசக்​தித் துறை மற்​றும் சட்​டத்​துறை அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல் குமார் பேசும்​போது, “கடந்த 25 ஆண்​டுகளில் மின்​சா​ரத் துறையை எந்த அளவுக்கு சீரழிக்க முடி​யுமோ அந்த அளவுக்கு சீரழித்து விட்​டனர். மின்​சார வாரி​யத்​தில் மொத்​த​முள்ள 4 லட்​சம் மின்​மாற்​றிகளில் 25 சதவீதம் 20 ஆண்​டு​கள் பழமை வாய்ந்​தவை. அவற்றை மாற்​றி​யாக வேண்​டும்.

அதே​போல், தற்​போதுள்ள துணை மின்​நிலை​யங்​களும் இன்​றைய மின்​தேவைக்கு போது​மானவை அல்ல. அவற்​றை​யும் அதி​கரிக்க வேண்​டும்.

15,000 இடங்​கள் நிரப்​பப்​படும்

இன்​றைய மின்​தேவைக்கு ஏற்ப மின்​சார வாரி​யத்​தில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டி​யுள்​ளது. அண்​மை​யில் முதல்​வர் தலை​மை​யில் நடை​பெற்ற மின்​துறை ஆய்​வுக் கூட்​டத்​தின்​போது, மின்​சார வாரி​யத்​தில் 70 ஆயிரம் காலி​யிடங்​கள் இருப்​ப​தைச் சுட்​டிக்​காட்​டினோம்.

உடனடி​யாக 15 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப முதல்​வர் ஒப்​புதல் அளித்​தார். அவை இந்த ஆண்டே நிரப்​பப்​படும். இது​போன்று ஒரே நேரத்​தில் 15 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது கடந்த 30 ஆண்​டு​களில் இது​தான் முதல்​முறை” என்றார்.

மின்​வாரி​யத் தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் வரவேற்​றுப் பேசி​னார். நிறை​வாக, எரிசக்​தித்​துறை செயலர் அனில் மேஷ்​ராம் நன்றி கூறி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில் தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் மற்​றும் மின்​சார வாரிய உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். நிகழ்ச்சி முடிந்​ததும் பணி நியமன ஆணை பெற்​றோருடன் முதல்​வர் விஜய்​ குரூப்​ போட்​டோ எடுத்​துக்​கொண்​டார்​.

SCROLL FOR NEXT