தமிழகம்

பேரவைத் தேர்தல் சிறப்பு பார்வையாளர் நியமனம்: பொதுமக்கள், அரசியல் கட்சிகள் தொடர்பு கொள்ளலாம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் சிறப்பு பார்​வை​யாள​ராக பிர​தாப் சிங் நியமிக்​கப்​பட்டார். தேர்​தல்​களில் அதிக செலவு செய்​யும் மாநில​மாக தமிழகத்தை தேர்​தல் ஆணை​யம் அடை​யாளம் கண்​டுள்​ளது.

கடந்த 2016 சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, அரவக்​குறிச்​சி, திருப்​பரங்​குன்​றம் ஆகிய தொகு​தி​களில் அதிக செலவு செய்​யப்​படு​வதை உறு​தி​செய்​து, தேர்​தலையே தேர்​தல் ஆணை​யம் நிறுத்​தி​யது

          

அப்​போது அரசி​யல்​வா​தி​களிடம் அதிகளவிலான ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. அதைத் தொடர்ந்​து, கடந்த 2017-ல் நடை​பெற்ற சென்னை ஆர்​.கே.நகர் இடைத்​தேர்​தலிலும், பணப் பட்​டு​வாடா நடை​பெறு​வதை உறுதி செய்​து, அந்ததேர்​தலை​யும் தேர்​தல் ஆணை​யம் நிறுத்​தி​யது.

இதற்​கிடையே தமிழகத்​தில் மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் 108 தொகு​தி​கள் அதிக செலவு செய்​யக்​கூடிய தொகு​தி​களாக தேர்​தல் ஆணை​யம் அடை​யாளம் கண்டுள்​ளது.

வழக்க​மாக இரு தொகு​தி​களுக்கு ஒரு செல​வினப் பார்​வை​யாளரை நியமிக்​கும் தேர்​தல் ஆணை​யம், இந்த முறை 151 செல​வினப் பார்​வை​யாளர்​களை நியமித்​துள்​ளது. தமிழகத்​தில் தேர்​தல் நேர்​மை​யாக நடத்​தப்பட வேண்​டும் என்​ப​தில் தேர்​தல் ஆணை​யம் உறு​தி​யாக உள்​ளது.

அதை கருத்​தில்​கொண்டே மாநில அளவில் தேர்​தல் சிறப்பு பார்​வை​யாள​ராக பிர​தாப் சிங் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இவரை பொது​மக்​கள் மற்​றும் அரசி​யல் கட்​சிகள் தேர்​தல் தொடர்​பான விவ​காரங்​கள் குறித்து தொடர்பு கொள்​ளலாம் எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, சென்னை ஆயகர் பவனில், இணைப்​புக் கட்டிடம், அறை எண். 412-ல் அவரை சந்​திக்​கலாம். அவரது அலுவல தொலைபேசி எண். 044 28338378, கைபேசி எண் 7845321461, மின்​னஞ்​சல் முகவரி splobs.pelecd@tn.gov.in ஆகியவை மூலம் தொடர்​பு​கொள்​ளலாம்.

அதே​போல், அவரது தொடர்பு அலு​வலர் ஜெகன் மோகனை 9551322999 என்ற எண்​ணில் தொடர்பு கொள்​ளலாம் என அர்ச்​சனா பட்​நாயக் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT