மதுரை: சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 140 அரசு வழக்கறிஞர் பதவிக்கு ஜூன் 29-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் 8 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், 2 அரசு பிளீடர்கள், 28 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், 44 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், 54 அரசு வழக்கறிஞர்கள் (உரிமையியல்), 4 அரசு வழக்கறிஞர்கள் (வரி) என மொத்தம் 140 அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் 99 பேர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், 44 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கும் நியமிக்கப்பட உள்ளனர்.
இப்பதவிக்கு வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஜூன் 29 மாலை 5.45 மணிக்குள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது.