தமிழகம்

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் மேல்முறையீடு: திமுக எம்.பி. உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: எஸ்​ஐஆர் பணிகள் முடிந்து ஜனவரி மாதம் வெளி​யாகும் வரைவு வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு இருப்பது கண்டறியப்பட்டால் சட்​டப்​பூர்வ நடவடிக்​கைகள் முன்​னெடுக்​கப்​படும் என்று திமுக எம்​.பி. என்​.ஆர்​.இளங்கோ கூறி​னார்.

திமுக சட்​டத்​துறை​யின் ஆலோசனைக் கூட்​டம் சென்னை அறி​வால​யத்​தில் நேற்று காலை நடை​பெற்​றது. இதில் திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​. ​பார​தி, சட்​டத்​துறை தலை​வர் இரா.​விடு​தலை, செய​லா​ளர் என்​.ஆர்​.இளங்கோ எம்​.பி. உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். இதில் தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​கள், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்​தல் செயல்​பாடு​கள் உட்பட பல்​வேறு விவ​காரங்​கள் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டன.

அதன்​பின் என்​.ஆர். இளங்கோ செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் 13 சதவீதத்​துக்​கும் அதி​க​மான வாக்​கு​கள் இறந்​தவர்​கள், இடம் மாறிய​வர்​கள் பட்​டியலில் வரு​கிறது. இரண்​டை​யும் சேர்த்​தால் 80 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​காளர்​கள் வரு​கிறார்​கள். இதில் யாரெல்​லாம் முறையற்ற வகை​யில் நீக்​கப்​பட்​டிருக்​கிறார்​கள் என்​பதை ஆய்வு செய்து உரிய தீர்வு வழங்​கப்​படும்.

வாக்​குச்​சாவடி மையங்​கள் அதி​கரிக்​கப்​படு​வது வரவேற்​கத்​தக்​கது. ஒரு வாக்​குச்​சாவடி​யில் அதி​கபட்​சம் 1,200 வாக்​காளர்​கள் என்ற அளவீடு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தால், மக்​கள் நீண்ட வரிசை​யில் நிற்​பது குறை​யும். அதே​போல், இந்த தேர்​தல் திமுக​வுக்கு சவாலாக இருக்​காது. நிச்​சய​மாக நாங்​கள் வெற்றி பெறு​வோம்.

எங்​களது ஒரே கவலை, தமிழக மக்​களின் ஒரு வாக்​கும் முறையற்ற வகை​யில் நீக்​கப்​படக்​கூ​டாது என்​பது​தான். எஸ்​ஐஆர் பணி​களில் மக்​களின் குடி​யுரிமையை பரிசோ​திப்​ப​தில்​தான் அனை​வருக்​கும் அச்​சம் வரு​கிறது. அதற்​கான தீர்வை உச்ச நீதி​மன்​றம் வழங்​கும்.

எஸ்​ஐஆர் பணி​கள் முடிந்​த​ பின்​னர் தேர்​தல் ஆணை​யம் வெளி​யிடும் வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு​கள் இருந்​தால், திமுக சட்​டப்​பூர்​வ​மாக மேல்​முறையீடு செய்து உரிய நிவாரணம் பெற்​றுத்​தரும். மேலும், திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்​தில் தமிழக அரசு சட்​டப்​படி நீதி​மன்​றத்​தில் வாதங்​களை முன்​வைத்​துள்​ளது.

SCROLL FOR NEXT