தமிழகம்

பழநி நில விவகாரத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

மதுரை: பழநி கோயில் நிலம் மோசடி​யாகப் பதிவு செய்​யப்​பட்ட வழக்​கில் தொடர்​புடைய வெள்​ளத்​துரை என்​பவர் முன்​ஜாமீன் கோரி தாக்​கல் செய்த மனுவை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

பழநி தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​குச் சொந்​த​மான நிலம் மோசடி​யாகப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாகக் கூறி அந்​தப் பத்​திரப் ப​திவை உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை அண்​மை​யில் ரத்து செய்தது. இந்த வழக்​கில் தொடர்​புடைய பாப்​பான்​குளம் பகு​தி​யைச் சேர்ந்த வெள்​ளத்​துரை என்​பவர் முன்​ஜாமீன் கோரி உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை​யில் மனுத் தாக்​கல் செய்தார்.

அதில் பழநி தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​குச் சொந்​த​மான 1.4 ஏக்​கர் நிலத்தை மோசடி​யாகப் பதிவு செய்​துள்​ள​தாக என் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. நான் வழக்கு விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு வழங்​கு​கிறேன். எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்​டும் என கோரி​யிருந்​தார்.

இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன் விசா​ரணைக்கு வந்​தது. மனுதாரர் தரப்​பில், “நிலம் தொடர்​பான வழக்​கில் உரிமை​யியல் நீதி​மன்​றத் தீர்ப்பு மனு​தா​ரருக்​குச் சாதக​மாக உள்ள நிலை​யில், பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதில் நிலத்தை வாங்​கியவர் மீது குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்க வேண்​டிய​தில்​லை” என தெரிவிக்​கப்​பட்​டது.

அரசுத் தரப்​பில், “சொத்​தின் மதிப்பு 16 கோடி. ஆனால் மனு​தா​ரர் 2 கோடி வழங்​கிய​தாக மனு​வில் தெரி​வித்​துள்​ளார். அதோடு நிலத்​தைப் பதிவு செய்யத் தீர்​மானம் நிறைவேற்​றிய​வர்களுக்கு ரூ.1 லட்​சம் அனுப்​பப்​பட்​டுள்​ளது” என கூறப்​பட்​டது.

சந்​தேகம் ஏற்​படுகிறது

இதையடுத்து நீதிப​தி, “மனு​தா​ரர் மற்​றும் விற்​பனையாளர் முரு​க​தாஸ் இரு​வரும் சேர்ந்தே இதனைச் செய்​துள்​ள​தாகத் தெரிகிறது. இதுகுறித்து சிபிசிஐடி விசா​ரிக்​கிறது. நிலத்​தைப் பதிவு செய்​யத் தீர்​மானம் நிறைவேற்​றிய​வர்​களுக்கு பணம் அனுப்​பப்பட்​டுள்​ளது சந்​தேகத்தை ஏற்​படுத்​துகிறது. விசா​ரணை நடந்தால்​தான் உண்மை தெரியும். இந்த நேரத்​தில் முன்​ஜாமீன் வழங்​கு​வது விசா​ரணை​யைப் பாதிக்​கும் எனக் கூறி முன்​ஜாமீன் மனு​வைத் தள்ளுபடி செய்தார்.

SCROLL FOR NEXT