தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா திடீர் மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா திடீர் மாற்றம்
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் முதல்​வர் குறித்து அவதூறாக பேசி​ய​தாக, திமுக எம்​எல்​ஏக்​கள் 2 பேர் அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்ட நிலை​யில், மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா திடீரென பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

தூத்​துக்​குடி மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா நேற்று திடீரென சிவகங்கை மாவட்​டத்​துக்​கும் அங்​கிருந்த ஆர்​.சிவபிர​சாத் தூத்​துக் குடிக்​கும் எஸ்​பி​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இதற்​கான உத்​தரவை தமிழக உள்​துறை கூடு​தல் தலை​மைச் செயலர் கே.மணி​வாசன் பிறப்​பித்​துள்​ளார்.

தூத்​துக்குடி மாவட்​டத்​தில் தமிழக முதல்​வர் விஜய் குறித்து அவதூறாக பேசி​ய​தாக திமுக எம்​எல்​ஏக்​கள் அனிதா ஆர்​.​ரா​தாகிருஷ்ணனும் ஜி.​வி.​மார்க்​கண்​டேயனும் அடுத்தடுத்த கைது செய்யப்பட்டனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்​யப்​பட்​ட​போது, தனது எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து ​விட்டு தவெக​வில் இணை​யு​மாறு மிரட்​டப்​பட்​ட​தாக புகார் தெரி​வித்​தார். இதேபோல் ஜி.​வி.​மார்க்​கண்​டேயன், தன்னை துப்​பாக்கி முனை​யில் போலீ​ஸார் மிரட்​டிய​தாக கூறியிருந்தார். அப்​போது, அவரிடம் பேட்டி எடுக்க முயன்ற செய்​தி​யாளர்​களை ஏடிஎஸ்பி தீபு ஒரு​மை​யில் பேசி மிரட்​டல் விடுத்​தார். கடும் கண்​டனம் எழுந்தது.

இந்​நிலை​யில், தூத்​துக்​குடி எஸ்பி அபிஷேக் குப்தா திடீரென பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்டுள்​ளார். தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் கடந்த 7 மாதங்​களில் 4 எஸ்​பிக்​கள் மாற்​றப்​பட்​டுள்​ளனர். தூத்​துக்​குடி எஸ்​பி​யாக இருந்த ஆல்​பர்ட் ஜான் மத்​திய அரசு பணிக்​குச் சென்​றதை தொடர்ந்​து, சிலம்​பரசனும் பின்​னர் சி.மதனும் பொறுப்​பேற்​றனர். ஆட்சி மாற்றம் ஏற்​பட்ட நிலை​யில், அபிஷேக் குப்தா பொறுப்​பேற்​றார். 2 மாதங்​களே ஆன நிலை​யில் அவரும் மாற்​றப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா திடீர் மாற்றம்
பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in