சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி ஓய்வுபெற்றதால், அப்பிரிவு ஐஜி துரை குமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி-யாக இருந்த அபய்குமார் கடந்த 31-ம் தேதியுடன் பணி ஓய்வுபெற்றார். முன்னதாக அவருக்கான பணி நிறைவு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. போலீஸ் அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து, அவரது பணியை நினைவுகூர்ந்து பாராட்டினர்.
மனநிறைவுடன் ஓய்வுபெறுவதாக அப்போது அபய் குமார்சிங் தெரிவித்தார். அவர் பணி ஓய்வுபெற்ற நிலையில் அந்த இடத்துக்கு அதிகாரி நியமிக்கப்படவில்லை.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜியாக உள்ள துரை குமாருக்கு, அப்பிரிவு டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த அதிகாரி நியமிக்கப்படும் வரை துரைகுமார் கூடுதலாக அந்த பொறுப்பை கவனித்துக் கொள்வார் என உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.