தமிழகம்

விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும்: பாஜக தேசிய தலைவர்களுக்கு ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தவெக தலை​வர் விஜய் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்​டணி முழு ஆதரவு அளிக்க வேண்​டும் என பாஜக தேசிய தலை​வர்​களுக்​கு, மாநில செய்​தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: எந்​த​வித அரசி​யல் பின்​னணி​யும் இன்​றி, மக்​கள் சேவை​யில் தன்னை முழு​மை​யாக ஈடு​படுத்​திக் கொண்டு வெற்றி பெற்​றுள்ள புதிய தலை​வருக்​கு, தன்னை ஒரு சிறந்த நிர்​வாகி​யாக நிரூபிக்க குறைந்​த​பட்​சம் 6 மாத அவகாசத்தை தமிழக அரசி​யல் கட்​சிகள் வழங்க வேண்​டும்.

2026 தேர்​தலில் 108 சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களு​டன் தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​துள்ள தமிழக வெற்​றிக் கழகம், விஜய் தலை​மை​யில் ஆட்சி அமைக்க அனைத்​துக் கட்​சிகளின் எம்​எல்​ஏக்​களும், தலை​வர்​களும் பெருந்​தன்​மை​யுடன் ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும்.

அதன்​பின், தவெக ஆட்​சி​யின் செயல்​பாடு​களை பொறுத்​து, ஒவ்​வொரு கட்​சி​யும் தங்​கள் கொள்​கைகளுக்கு ஏற்ப முடி​வெடுத்து நாகரிக அரசி​யலை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும்.

மக்​களின் தீர்ப்​புக்கு தலை​வணங்​கி, தமிழக அரசி​யலில் ‘கு​திரை பேரம்’ என்ற அவப்​பெயருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும். தவெக எந்​த​வித அழுத்​த​மும் இன்றி சுதந்​திர​மாக ஆட்சி அமைக்​க​வும், அவர்​கள் விரும்​பி​னால் மட்​டுமே கூட்​டணி அமைக்​க​வும் அனைத்து கட்​சிகளும் முன்வர வேண்​டும்.

இது தொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, பாஜக தேசி​யத் தலை​வர் ஆகியோ​ருக்கு கடிதம் எழு​தி​யுள்​ளேன்.

தமிழக தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் தலை​வர் பழனி​சாமி​யிடம், தேசி​யத் தலை​வர்​கள் இது குறித்​துப் பேசி, தவெக சுய விருப்​பத்​துடன் ஆட்சி அமைக்​க​வும், ஊழல் மற்​றும் பிரி​வினை​வாத சக்​தி​களின் அழுத்​தம் இன்றி செயல்​பட​வும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி முழு ஆதர​வளிக்க வேண்​டும்.

திமுகவை வீழ்த்த வேண்​டும் என்ற மக்​களின் எண்​ணம் ஒரு​புறம் இருந்​தா​லும், மாற்​றத்​துக்​கான அடை​யாள​மாக தவெக தலை​வர் விஜய்யை மக்​கள் தேர்ந்​தெடுத்​துள்​ளனர். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT