அண்​ணா​மலை

 
தமிழகம்

இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன்: அமெரிக்காவில் அண்ணாமலை உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: வட அமெரிக்​கத் தமிழ்ச் சங்​கப்பேர​வை​யின் (ஃபெட்​னா) தமிழ் விழா அமெரிக்​கா​வின் நியூஜெர்​சி​யில் நடை​பெற்​றது. இதில் ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பின் நிறு​வனர் அண்​ணா​மலை சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்டு பேசி​ய​தாவது: நான் ஃபெட்னா விழாவுக்​குச் செல்​வது குறித்து தமிழக ஊடகங்​களில் பல்​வேறு விவாதங்​கள் எழுந்​தன.

‘இந்​துத்​து​வக் கொள்​கை​யில் இருந்து அண்​ணா​மலை மாறுகிறா​ரா?’ என்ற கேள்வி​கள் முன்​வைக்​கப்​பட்​டன. இதற்கு கம்ப ராமாயணத்​தின் யுத்த காண்​டத்​தில் வரும் கடவுள் வாழ்த்​துப் பாடலையே பதிலாகக் கருதுகிறேன். ‘கட​வுள் இருக்​கிறார் என நம்​புவோருக்கு அவர் இருக்​கிறார்; இல்லை என்​பவருக்கு இல்​லை’.

நமது தமிழ் இனத்தை இந்​து, முஸ்​லிம், கிறிஸ்​தவர் என ஒரு சிறிய வட்​டத்​தில் அடைக்​கக்கூடாது. அதையெல்​லாம் தாண்டி‘தமிழர்’ என்ற வட்​டம் ஒரு பெரியவட்​ட​மாக இருக்க வேண்​டும். மதம் பின்​னாளில்​தான் வந்​தது. ஆனால், ஒரு மனிதன் அறத்​தோடு எப்​படி வாழ வேண்​டும் என்று கற்​றுக்​கொடுத்த மண்​ணில் இருந்து நாம் வந்​திருக்​கிறோம்.

சினம் கொள்​ளாமல், அமிர்​தமே கிடைத்​தா​லும் பகிர்ந்து உண்​டு, பிறர் நலனுக்காக உழைப்​பதே உண்​மை​யான தமிழனின் அடை​யாளம் என புற​நானூறு நமக்கு கற்​பிக்​கிறது. சமு​தா​யம் ஒரு​வனை சாதி​யால் தரம் பிரிக்​கலாம். ஆனால், ஒரு மனிதனிடம் அறி​வு, கண்​ணி​யம், ஒழுக்​கம் இருந்​தால், ஒரு மன்​னனே அவனிடம் வந்து ‘என்​னோடு படைக்கு வா’ என்று அழைப்​பான்.

தமிழகத்​தில் இலங்கைத் தமிழர்​களை ‘அக​தி​கள்’ என்று அழைப்​பது தவறான வார்த்​தை. அவர்​கள் புலம் பெயர்ந்​தவர்​கள். வட அமெரிக்​கா​வில் மட்​டும் 4 லட்​சம் இலங்​கைத் தமிழர்​கள் வாழ்​கின்​றனர். போரால் பாதிக்​கப்​பட்டு உலகம் முழு​வதும் வாழும் இலங்​கைத் தமிழர்​களுக்கு நமது காலத்​திலேயே தகுந்த நியா​யம் கிடைக்​கச் செய்ய வேண்​டும்.

அவர்​களது உரிமைக்​காக தொடர்ந்து குரல் கொடுப்​பேன். கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா வந்​த​போது அவருக்கு நீங்​கள் சிறப்​பான வரவேற்பு அளித்​தீர்​கள். அதன் காரண​மாக இந்த ஆண்டு நான் இங்கு வந்​துள்​ளேன்.

கடந்த 2024-ல் பாஜக வெளி​யிட்ட தேர்​தல் அறிக்​கை​யில், ‘உல​கம் முழு​வதும் தமிழ் இருக்​கையை அமைப்​போம்’ என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. அதை​விட ஒரு பெருமை தமிழனுக்கு என்ன இருக்க முடி​யும்.

தமிழ் மண்​ணில் பிறக்​காத ஒரு​வர் (பிரதமர் மோடி), உலகின் மூத்த மொழி​யான தமிழின் பெரு​மை​யைப் பேசுவது நமக்கு கர்​வத்​தை​யும், மகிழ்ச்​சி​யை​யும் அளிக்​கிறது.

ஃபெட்னா அமைப்பு கட்​சிகளைக் கடந்​து, சித்​தாந்​தங்​களைதாண்​டி, தமிழால் இணைய வேண்​டும். அனை​வரை​யும் தமிழால் இணைக்​கக்​கூடிய ஒருபொது​வான அமைப்​பாக இருக்க வேண்​டும்.

தமிழுக்கு ஆதர​வாக நிற்​பவர்​களுக்கு துணைநிற்க வேண்​டும் என விரும்​பு​கிறேன். தமிழ் இனத்தை உலக அளவில் உயர்த்த நாம் அனை​வரும் ஒன்​றிணைந்​து செயல்​படு​வோம்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT