தமிழகம்

“விளாத்திகுளம் மாணவி கொலை; குற்றவாளியைப் பிடிக்க 10 நாட்கள் ஏன்?” - சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 2020-ம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில், 2022-ம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டு 2024-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

          

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவரைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது. மேலும், சிசிடிவி மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடிக்க 10 நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.

எனவே, காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT