தமிழகம்

புதிய கட்சித் தொடக்கமா? பாஜகவில் நீடிப்பா? - இன்று ‘மனம் திறக்கும்' அண்ணாமலை

செய்திப்பிரிவு

சென்னை: பு​திய கட்சி தொடக்​க​மா? பாஜக​வில் நீடிப்​பா? என்​பது தொடர்​பாக இன்று மதி​யம் சமூக ஊடகங்​களில் தோன்றி அண்ணாமலை மனம் திறந்து பேசுகிறார்.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்ணாமலை, புதிய கட்சி தொடங்​கப் போவ​தாக செய்​தி​கள் வெளி​யாகின. சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு பிறகு, இது தொடர்​பாக தனது ஆதர​வாளர்களுடன் அவர் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்டு வந்​தார்.

இந்​தச் சூழலில், கடந்த 1-ம் தேதி டெல்லி சென்ற அண்​ணா​மலை, பாஜக தேசி​யத் தலை​வர் நிதின் நவீனை சந்​தித்​து, கட்​சி​யில் இருந்து வில​கு​வ​தாக கடிதம் கொடுத்​த​தாக தகவல் வெளி​யானது. பின்​னர், மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷாவை​யும் சந்​தித்​துப் பேசி​னார்.

அண்​ணா​மலையை சமரசம் செய்ய தீவிர முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்​டன. பிரதமர் நரேந்​திர மோடியை​யும் சந்​தித்​துப் பேசி​விட்​டு, இன்று தமிழகம் திரும்பி தனது முடிவை அறிவிக்க அண்​ணா​மலை திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.இந்​நிலை​யில்​, சமூக ஊடகங்​கள் வாயி​லாக நேரடி​யாக மக்​களிடம் உரை​யாட உள்​ள​தாக அண்​ணா​மலை கூறியுள்​ளார்.

இதுகுறித்து அவரது தனது எக்ஸ் தள பக்​கத்​தில், ‘ஜூன் 5-ம் தேதி (இன்​று) மதி​யம் 12 மணிக்​கு, சமூக வலை​தளங்​கள் மூலம் உங்​கள் அனை​வரை​யும் சந்​தித்​து, கருத்​துகளை பகிர்ந்து கொள்​ள​வும், மனம் திறந்து உரை​யாட​வும் ஆவலுடன் எதிர்​ நோக்கி இருக்​கிறேன்’ என்று பதி​விட்​டுள்​ளார்.

அத்​துடன் தனது இன்​ஸ்​டாகி​ராம், ஃபேஸ்​புக், யூடியூப் மற்​றும் எக்ஸ் தள கணக்​கு​களின் லிங்​கு​களை​யும் அவர் பகிர்ந்​துள்​ளார்.

தலை​வர்​கள் வாழ்த்து

பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை தனது 42-வது பிறந்​த​நாளை நேற்று கொண்​டாடி​னார். அவருக்கு அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், அதி​முக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி, ஐஜேகே தலை​வர் ரவி பச்​ச​முத்து உள்​ளிட்ட அரசி​யல் தலை​வர்​கள், பிரபலங்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT