அண்ணாமலை
கோவை: கோவை மாவட்டம் கணியூர் அருகே உள்ள சேடர்பாளையத்தில் பட்டத்தரசி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. இதில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் பேசுபொருளாக உள்ளது. ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைப்பது இயல்புதான். ஆனால், இதில் முதல்வர் அலுவலகம், தவெக கட்சி எதுவும் கூறாமல் இருப்பது சந்தேகம் அளிக்கிறது.
தவெக எம்எல்ஏ, ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினாரா, இல்லையா என்பது குறித்து முதல்வர் தானாக முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டும். எல்லா விஷயத்தையும் மூடி மறைத்தால் அரசின் மீது நம்பிக்கை குறைந்துவிடும். ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் இருக்கிறது. அவர்களாவது இது தொடர்பாக வெளியே சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.