திருச்செந்தூர் நீதிமன்றத்துக்கு நேற்று வழக்கறிஞர்களுடன் வந்த திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்.

 
தமிழகம்

அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீனில் விடுவிப்பு: 10 நாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் ஆத்​தூரில் கைது செய்​யப்​பட்ட திமுக எம்​எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு திருச்​செந்​தூர் நீதி​மன்​றம் நேற்று முன்​தினம் நள்​ளிரவு ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டது.

ஆத்​தூரில் கடந்த 20-ம் தேதி நடை​பெற்ற திமுக பொதுக்​கூட்​டத்​தில் முன்​னாள் அமைச்​ச​ரான அனிதா ஆர்​.​ரா​தாகிருஷ்ணன் தமிழக முதல்​வர் விஜய் குறித்து அவதூறாக பேசி​ய​தாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர். இந்த வழக்​கில் முன்​ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்​கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அவரை ஆத்​தூர் போலீ​ஸார் கைது செய்​தனர். பின்னர், இரவு குற்​ற​வியல் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் முன்​னிலையில் போலீஸார் ஆஜர்​படுத்​தினர்.

அரசு வழக்​கறிஞர் வனிதா மற்​றும் திமுக ஆதரவு வழக்​கறிஞர்​கள் இடையே சுமார் 2 மணி நேரம் கார​சார விவாதம் நடந்​தது. நள்​ளிரவு 12.30 மணியள​வில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி சிதம்​பரம் உத்​தர​விட்​டார். 10 நாட்​கள் தின​மும் ஆத்​தூர் காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திட வேண்​டும் என்று நிபந்​தனை​யுடன் அவர் விடுவிக்​கப்​பட்​டார்.

இதைத்​தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று காலை 10.30 மணிக்கு நீதிபதி முன்பு ஆஜரா​னார். பின்​னர் நீதி​மன்​றத்​துக்கு வெளியே அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் சேரு​மாறு என்​னிடம் பேரம் பேசினார்கள். இதுதொடர்​பாக திமுக தலை​மை​யிடம் அனு​ம​தி பெற்​று, எனது வழக்​கறிஞர்​களிடம் ஆலோ​சனை செய்து சட்ட நடவடிக்கை குறித்து முடி​வெடுப்​பேன்.

முன்​னாள் அமைச்​சர்​கள் மீது வழக்​குப்​ப​திவு செய்​து, திமுகவை எந்த வகையி​லா​வது வீழ்த்தி விடலாம் என்ற எண்​ணத்​துடன் காவல்​துறையை வைத்து விளை​யாட நினைக்​கின்​றனர். பாஜகவை கண்​டும் விஜய் அஞ்​சும் நிலை​யில் தான் இருக்​கிறார். இவ்​வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT