தமிழகம்

ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க அன்புமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆவின் நிறு​வனம் சார்​பில் தமிழகம் முழு​வதும் தின​மும் 31 லட்​சம் லிட்​டரும் சென்​னை​யில் தின​மும் 16 லட்​சம் லிட்​டருக்​கு அதி​க​மாகவும் பால் விற்​பனை செய்​யப்​பட்​டது.

தமிழகத்​தில் சென்னை உள்​ளிட்ட அனைத்து மாவட்​டங்​களி​லும் ஆவின் பாலுக்கு கடந்த சில நாட்​களாக கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. ஏழைகள், குழந்​தைகளுக்கு வரப்​பிர​சாத​மாக விளங்​கும் ஆவின் பால் அனைத்து மக்​களுக்கு தடை​யின்றி கிடைப்​பதை உறுதி செய்ய அரசு தவறி​யது கவலை அளிக்கிறது.

கடந்த 5 ஆண்​டு​களாகவே ஆவின் பால் கொள்​முதல் படிப்​படி​யாக வீழ்ச்​சி​யடைந்து வரு​கிறது. ஆவின் பால் கொள்​முதல் 13 லட்​சம் லிட்​டர் குறைந்​திருப்​ப​தற்கு அதன் கொள்​முதல் விலை உயர்த்​தப்​ப​டாததே காரணம்.

பசும்​பால் லிட்​டருக்கு ரூ.35, எரு​மைப்​பால் லிட்​டருக்கு ரூ.44 என்ற ஆவின் நிறு​வனத்​தின் கொள்​முதல் விலை​யுடன் சேர்த்து லிட்​டருக்கு ரூ.3 வீதம் ஊக்​கத்​தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது.

ஆனால், தனி​யார் நிறு​வனங்​கள் அதை விட லிட்​டருக்கு ரூ.12 வரை கூடு​தலாக கொடுத்து கொள்​முதல் செய்​கின்​றன. அதற்கு இணை​யாக ஆவின் நிறு​வன​மும் கொள்​முதல் விலையை உயர்த்​தாமல் பால் கொள்​முதலை அதி​கரிக்க முடி​யாது.

ஆவின் பால் கொள்​முதல் விலையை லிட்​டருக்கு குறைந்​தது ரூ.10 உயர்த்​தி, கொள்​முதலை அதி​கரிக்க வேண்​டும். அதன் மூலம் ஆவின் பால் மாநிலம் முழு​வதும் தடை​யின்றி கிடைப்​ப​தை உறு​தி செய்​ய வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT