அன்புமணி

 
தமிழகம்

“அரசு ஊழியர்களை திமுக ஏமாற்ற முடியாது” - அன்புமணி விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘பயனற்ற ஓய்​வூ​திய திட்​ட​மும் பயன்​பாட்​டுக்கு வராத நிலை​யில் பாராட்டு விழா நாடகங்​கள் மூலம் அரசு ஊழியர்​களை திமுக ஏமாற்ற முடி​யாது’ என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: ஜாக்டோ - ஜியோ அமைப்​பின் போர்​வை​யில் முதல்வர் ஸ்டா​லினுக்கு நன்றி அறி​விப்பு மாநாடு எனும் பெயரில் பிப்​.8-ம் தேதி ஓர் நாடகம் அரங்​கேற​வுள்​ளது. அரசு ஊழியர்​களை ஏமாற்​றும் வகை​யில் உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அரசு அறி​வித்​தது.

          

அரசு ஊழியர்​களும், ஆசிரியர்​களும் ஆட்​சி​யாளர்​களுக்கு எதி​ராக எரிமலை​யாக கொந்​தளிக்​கும் நிலை​யில், கோடிக்​கணக்​கில் பணத்தை வாரி இறைத்​து, அரசு ஊழியர் அமைப்​பு​ பெயரில், திமுகவே பாராட்டு விழாக்​களை நடத்​தி​னாலும், அவர்​களின் ஆதரவை பெற முடி​யாது. திமுகவை வரும் தேர்​தலில் அவர்​கள் பழிதீர்க்​கப் போவது உறு​தி. இவ்​வாறு தெரி​வித்​துள்ளார்.

அன்​புமணி வெளி​யிட்ட மற்​றொரு அறிக்​கை​: பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி சத்​துணவு மற்​றும் அங்​கன்​வாடிபணி​யாளர்​களின் கூட்​டமைப்​பினர் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். அவர்​கள் மீது அடக்​கு​முறை​களை கட்​ட​விழ்த்து விடு​வதைக் கைவிட்​டு, அவர்​களு​டன் அரசு உடனடி​யாக பேச்சு நடத்த வேண்​டும்.கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தியஉயர்வு உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டும்.

அதே​போல், ஊ​ராட்சி செய​லா​ளர்​கள் அனை​வருக்​கும் ஊராட்சி ஒன்​றிய பதிவுறு எழுத்​தர்​களுக்கு வழங்​கப்​படு​வதைப் போல, தகு​திக்​கேற்ற உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யம் வழங்கவேண்​டும். மேலும், பணி​யிடைநீக்​கம், இடமாற்​றம் போன்றஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்​து, ஏற்கெனவே இருந்த இடத்​திலேயே பணிசெய்ய அரசு அனு​ம​திக்க வேண்​டும். இவ்வாறு கூறியுள்​ளார்​.

SCROLL FOR NEXT