மலேசியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து

பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக நேற்று மலேசியாவுக்கு சென்றார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவரை, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் வரவேற்றார். அப்போது, பாரம்பரிய நடனமாடி மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த மலேசியக் கலைஞர்கள்.

பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக நேற்று மலேசியாவுக்கு சென்றார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவரை, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் வரவேற்றார். அப்போது, பாரம்பரிய நடனமாடி மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த மலேசியக் கலைஞர்கள்.

Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் மோடி 2 நாள் பயண​மாக மலேசியா சென்​றடைந்​தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. இரு தரப்​புக்​கும் இடையே இன்று பல்​வேறு முக்கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாக உள்​ளன.

மலேசி​யா​வுக்கு வருமாறு பிரதமர் நரேந்​திர மோடிக்கு அந்​நாட்டு பிரதமர் அன்​வர் இப்​ராகிம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, 2 நாள் பயண​மாக பிரதமர் மோடி நேற்று மலேசியா சென்​டைந்​தார்.

கோலாலம்​பூர் விமான நிலை​யத்​தில் அவருக்கு சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. இந்​தியா - மலேசியா இடையே தொடர்ந்து சிறப்​பான நட்​புறவு உள்​ளது. அந்த உறவை இன்​னும் வலுப்​படுத்த இரு நாட்டு தலை​வர்​களும் முடி​வெடுத்​துள்​ளனர்.

இதுகுறித்து மலேசி​யா​வுக்​கான இந்​திய தூதரக அதி​காரி பி.என்​.ரெட்டி கூறியதாவது: பிரதமர் மோடி வரு​கை​யின்​போது இந்​தியா - மலேசியா இடையே வர்த்​தகம், பொருளா​தா​ரம், வளர்ந்து வரும் தொழில்​நுட்​பம், எரிசக்​தி, கல்வி உட்பட பல்​வேறு துறை​களில் ஒத்​துழைப்பு குறித்து விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்பட உள்​ளது.

வழக்​க​மான துறை​கள் மட்​டுமின்​றி, புதிதாக வேறு எந்​த துறை​களில் இரு நாடு​களும் சேர்ந்து செயல்​படு​வதற்​கான வாய்ப்​பு​கள் உள்ளன என்​பது குறித்​தும்

ஆலோ​சிக்​கப்​படும். இவ்வாறு அவர் கூறினார்.

இரு நாடு​களுக்​கும் இடையே இன்று முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாக உள்​ளன. மோடி வரு​கையை முன்​னிட்​டு, மலேசி​யா​வில் வாழும் இந்​தி​யர்​கள் கோலாலம்​பூரில் பிரம்​மாண்ட நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​துள்​ளனர். இதில் ஆயிரக்​கணக்​கான இந்​தி​யர்​கள் பங்​கேற்க உள்​ளனர். இதில் மலேசி​யாவின் கலாச்​சார நிகழ்ச்​சிகளும் நடை​பெற உள்​ளன. பிரதமர் மோடி​யுடன், அந்​நாட்டு பிரதமர் அன்​வர் இப்​ராகி​மும்​ இதில் பங்​கேற்​கிறார்​.

<div class="paragraphs"><p>பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக நேற்று மலேசியாவுக்கு சென்றார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவரை, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் வரவேற்றார். அப்போது, பாரம்பரிய நடனமாடி மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த மலேசியக் கலைஞர்கள்.</p></div>
‘‘உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி!’’ - மலேசியாவில் பிரதமர் மோடி பெருமிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in