பாமக தலைவர் அன்புமணி

 
தமிழகம்

பாமகவின் 38-ம் ஆண்டு புதிய தொடக்கமாக அமையும்: தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம்

செய்திப்பிரிவு

சென்னை: ​பாமகவின் 38-ம் ஆண்டு புதிய தொடக்​க​மாக அமை​யும் என்று கட்​சித் தலை​வர் அன்​புமணி கடிதம் எழு​தி​யுள்​ளார். அந்தக் கடிதத்தின் விவரம் பின்வருமாறு: தமிழக அரசி​யல் பாதையை தீர்​மானிக்​கும் சக்​தி​யாக​வும், ஒட்​டுமொத்த தமிழ்ச் சமூகத்​தின் உரிமைக்​குரலாக​வும் விளங்​கும் பாமக ஜூலை 16-ம் தேதி 37 ஆண்​டு​களை நிறைவு செய்​து, 38-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைக்கிறது.

வரலாற்​றுச் சிறப்​புமிக்க இந்த தருணத்​தில் உலகெங்​கும் வாழும் பாட்​டாளி சொந்​தங்​களாகிய உங்​கள் அனை​வருக்​கும் நிறு​வனர் ராம​தாஸ் சார்​பிலும், எனது சார்​பிலும் உளமார்ந்த வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

எதிர்பாராத அலை

ஓர் அரசி​யல் இயக்​கத்​தின் வெற்றி என்​பது ஆட்​சி​யைப் பிடிப்​பது மட்​டுமே அல்ல. அதி​காரத்​துக்கு வராமலேயே அரசு இயந்​திரத்​தை​யும், அதி​காரமையத்​தை​யும் இயங்​கச் செய்​வது​தான் ஓர் அரசி​யல் இயக்​கத்​தின் உண்​மை​யான வெற்​றி.

அந்த வகை​யில், தமிழக அரசி​யலில் பாமக மிகப்​பெரிய வெற்​றியைப் பெற்​றிருக்​கிறது. நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் யாருமே எதிர்​பா​ராத அலை வீசி​ய​தால் தேர்​தல் முடிவு​கள் மாறின.

35-க்​கும் மேற்பட்ட இடங்​களில் நமது கூட்​ட​ணிக் கட்சி வெற்றி பெற நாம்​தான் காரண​மாக இருந்​துள்ளோம். நாம் 4 இடங்​களில்​தான் வெற்றி பெற்​றோம் என்றாலும் இன்​றைய சூழலில் அது 40 இடங்​களுக்கு சமம் என்​பதை நீங்​கள் அறிவீர்​கள்.

அரசியல் சாதனை

ஆட்​சி​யில் இல்​லா​விட்​டாலும், மக்​களுக்​காக களத்​தில் இறங்​கிப் போராடு​வ​தில் அன்​றும், இன்​றும் பாமக​தான் உண்​மை​யான எதிர்க்​கட்​சி​யாக திகழ்​கிறது. ஆனாலும், மக்​களுக்​கான உரிமை​களை போராடி பெற்​றுக் கொடுக்​கும் நிலை​யிலேயே ஓர் அரசி​யல் கட்சி தொடர முடி​யாது.

மக்​களின் தேவை​களை நிறைவேற்​றிக் கொடுக்​கும் நிலையை எட்ட வேண்​டும் என்​பதே ராமதாஸின் கனவு. அவரது கனவை நனவாக்​கும் பயணத்​தில் பாமக​வின் 38-ம் ஆண்டு புதிய தொடக்​க​மாக அமை​யும்.

இந்த ஆண்​டின் அரசி​யலிலும், சமூகநீ​தி​யிலும் மேலும் பல சாதனை​களை படைக்​கப் போகிறோம். பாமக 38-ம் ஆண்டு தொடக்​க​ விழாவை தமிழகம் மட்​டுமின்றி, அண்டை மாநிலங்​களி​லும் உள்ள பாட்​டாளி சொந்​தங்​கள் சிறப்​பாக கொண்​டாட வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT