பாடகர் கிருஷ்ணராஜ் | அன்புமணி

 
தமிழகம்

புகழ்பெற்ற பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு அன்புமணி இரங்கல்

மு.சக்தி

சென்னை: “தேவாவால் அறிமுகம் செய்யப்பட்டு புகழ்பெற்ற கிருஷ்ணராஜ், தேவா மறைந்த சில நாள்களில் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று பாமக தலைவர் அன்புமணி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சிங்கப்பூர் அதிபராக இருந்த தமிழர் எஸ்.ஆர் நாதனால் பாராட்டப்பட்ட பொற்காலம் திரைப்படத்தின் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலின் மூலம் புகழ்பெற்ற கிருஷ்ணராஜ், மக்களின் மனதை நிறைத்த நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார்.

இசையமைப்பாளர் தேவாவின் குழுவில் ஒருவராக பணியாற்றி, அவரால் அறிமுகம் செய்யப்பட்டு புகழ்பெற்ற கிருஷ்ணராஜ், தேவா மறைந்த சில நாட்களில் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.

பாடகர் கிருஷ்ணராஜை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அன்புமணி கூறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT