அன்புமணி

 
தமிழகம்

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மழை​யால் பாதிக்​கப்​பட்ட பயிர்​களுக்கு ஏக்​கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்​பீடு வழங்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் கடந்த அக்​டோபர் மற்​றும் நவம்​பரில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்​களுக்கு இரு மாதங்​களாகியும் இன்னும் இழப்​பீடு தர​வில்​லை.

லட்​சக்​கணக்​கான விவ​சா​யிகள் தங்​களின் வாழ்​வா​தா​ரத்தைஇழந்து தவிக்​கும் நிலை​யில், அவர்​களுக்கு இழப்​பீடு வழங்​கும் விஷ​யத்​தில் திமுக அரசு தாமதம் செய்​வதும், ஏமாற்ற முயல்​வது கண்​டிக்​கத்​தக்​கது.

உதவி வேளாண் அலு​வலருக்​கும் 14 முதல் 16 வருவாய் கிராமங்​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளதால் பாதிப்பை கணக்​கிடு​வதற்கு பல நாட்​கள் ஆகும்.மேலும் காவிரி பாசன மாவட்டங்​களில் ஒரு ஏக்​கர் சம்​பா,தாளடி பயிர்​களுக்​கான சாகுபடி செலவு ரூ.40 ஆயிரம் ஆகும்நிலை​யில், ஏக்​கருக்கு ரூ.8 ஆயிரம் மட்​டுமே இழப்​பீடு வழங்​கப்​படும் என்று அரசு அறி​வித்​திருப்​பதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது. விவ​சா​யிகளுக்கு இனி​யும் தாம​திக்​காமல் உடனடி​யாக இழப்​பீடு வழங்க வேண்​டும். ஏக்​கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்​பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்​டும்.

SCROLL FOR NEXT