தமிழகம்

“நாங்களும் மோசமாகப் பேசினால் ஸ்டாலின் தாங்க மாட்டார்” - அன்புமணி ஆவேசம்

செய்திப்பிரிவு

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் என்​னை​யும், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை​யும் மோச​மாக விமர்​சனம் செய்து வரு​கி​றார். பதி​லுக்கு நாங்​களும் பேசி​னால் முதல்​வ​ரும், உதயநி​தி​யும் தாங்க மாட்​டார்​கள் என பாமக தலை​வர் அன்​புமணி பேசி​னார்.

தரு​மபுரி மாவட்​டம் பாலக்​கோடு சட்​டப்​பேரவை தொகு​தி​யில் அதி​முக வேட்​பாள​ராக முன்​னாள் அமைச்​சர் கே.பி.அன்​பழ​கன் போட்​டி​யிடு​கி​றார். அவரை ஆதரித்து காரிமங்​கலத்​தில் நேற்று நடந்த பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் அன்​புமணி பேசி​ய​தாவது: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் என்​னை​யும், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை​யும் மோச​மாக விமர்​சனம் செய்து வரு​கி​றார். பதி​லுக்கு எங்​களுக்​கும் பேசத் தெரி​யும்.

அவ்​வாறு பேசி​னால் முதல்​வ​ரும், உதயநி​தி​யும் தாங்க மாட்​டார்​கள். அவ்​வாறு பேசி மக்​களின் கவனத்தை திசை திருப்​ப​வும் விரும்​ப​வில்​லை. திமுக ஆட்​சி​யின் அவலங்​களை மக்​களிடம் கூறி வாக்கு சேகரித்து வரு​கி​றோம். 5 ஆண்​டு​கால ஆட்​சி​யில் செய்த சாதனை​களைக் கூறி மக்​களிடம் வாக்கு கேட்​காமல் ரூ.8,000 போலி கூப்​பனை காட்டி திமுக அணி​யினர் வாக்கு கேட்​பது வெட்​கக்​கேடு இல்​லை​யா?

தமி​ழ​கத்​தில் கடந்த 5 ஆண்டு கால​மாக ஒரு நரக ஆட்​சியை திமுக நடத்​திக் கொண்​டிருக்​கிறது. சின்ன குழந்​தைகளை பாலியல் கொடுமை செய்து கொலை செய்​யக் கூடிய குற்​றங்​கள் நடப்​ப​தாக திமுக ஆட்சி உள்​ளது. இதெல்​லாம் மாற தமிழக முதல்​வ​ராக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வர வேண்​டும்.

இன்​னும் 1 மாதத்​தில் அவரது அமைச்​சர​வை​யில் அமைச்​ச​ராக பதவி​யேற்​க​வுள்ள கே.பி.அன்​பழ​க​னுக்கு இரட்டை இலை சின்​னத்​தில் வாக்​களித்து வெற்றி பெறச் செய்​யுங்​கள்.

வரவிருக்​கும் தேர்​தலில் தரு​மபுரி மாவட்​டத்​தின் 5 சட்​டப் பேரவை தொகு​தி​களி​லும் திமுக அணியை டெபாசிட் இழக்​கச் செய்​யுங்​கள். தரு​மபுரி மாவட்​டத்​துக்கு திமுக அரசு மிகப்​பெரிய துரோகம் செய்​திருக்​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT