தமிழகம்

அன்பில் மகேஸிடம் 2-வது நாளாக விசாரணை: ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் மேலும் பலர் சிக்குகிறார்கள்

பணம் கைமாறிய விவரங்களை திரட்டும் போலீஸார்

செய்திப்பிரிவு

சென்னை: ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் அன்​பில் மகேஸிடம் போலீ​ஸார் 2-வது நாளாக தீவிர விசா​ரணை நடத்​தினர்.

கடந்த திமுக ஆட்​சி​யின்​போது தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் வழங்​கு​வதற்​காக ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து முறைகேடு நடந்​த​தாக தனியார் பள்​ளி​கள் சங்க பொதுச்​செய​லா​ளர் இளங்​கோவன் அளித்த புகாரின்​பேரில், முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் கடந்த அக்​டோபர் 26-ம் தேதி கைது செய்​யப்​பட்டு புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்டார்.

இந்​நிலை​யில், அன்​பில் மகேஸை கடந்த 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை 3 நாட்​கள் போலீஸ் காவலில் வைத்து விசா​ரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்​தது. இதையடுத்து போலீஸ் காவலில் எடுக்​கப்​பட்ட அன்​பில் மகேஸிடம் முதல் நாளில் பல்​வேறு கேள்​வி​களை கேட்டு விசா​ரணை நடத்​தினர்.

2-வது நாளான நேற்று விசா​ரணை தீவிரமடைந்​தது. பெண் தொழில் அதிபரும் ஆடை வடிவ​மைப்​பாள​ரு​மான சண்​முகப்​பி​ரியா வீட்​டில் அண்​மையில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் அடிப்​படை​யிலும் அன்​பில் மகேஸிடம் கேள்​வி​கள் எழுப்​பப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

மேலும், இந்த முறைகேட்​டில் பெறப்​பட்ட பணம் பல்​வேறு நபர்​களுக்கு பிரித்​துக் கொடுக்​கப்​பட்​டதா? அதில் யாருக்​கெல்​லாம் தொடர்பு உள்​ளது என்​பது குறித்​தும் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

அன்​பில் மகேஸின் மனைவி ஜனனி​யிடமும் விசா​ரணை நடத்த போலீ​ஸார் திட்​ட​மிட்​டுள்​ளனர். இதற்​கிடையே, அன்​பில் மகேஸிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் கிடைத்த தகவல்​களின் அடிப்​படை​யில் மேலும் சில முக்​கிய நபர்​கள் இந்த வழக்​கில் சிக்க வாய்ப்​புள்​ள​தாக போலீஸ் வட்​டாரங்​கள் தெரி​விக்​கின்​றன.

இன்று 3-வது நாளாக விசா​ரணை நடை​பெற உள்​ளது. விசா​ரணை முடிந்​ததும் மாலை 5 மணிக்கு அன்​பில் மகேஸை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்த போலீ​ஸார் நட​வடிக்கை மேற்​கொண்​டுள்​ளனர். பின்​னர் அவர் மீண்​டும் சிறை​யில் அடைக்​கப்​படுவார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT