தமிழகம்

சாட்சிகள் வாக்குமூலத்தால் நெருக்கடி: அன்பில் மகேஸ் ஜாமீன் மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸின் ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்த சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்ற நீதிபதி, மாணவர்​கள் நலனே முக்​கியம் என்று கருத்து தெரி​வித்​துள்​ளார்.

முந்​தைய திமுக ஆட்​சி​யில், தமிழகத்​தில் உள்ள தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் உள்​ளிட்ட அனுமதி​களை பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி 177 தனியார் பள்ளி நிர்​வாகி​களிடம் கட்சி நிதி என்ற பெயரில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து முறைகேட்​டில் ஈடு​பட்​டுள்​ள​தாக புகார் எழுந்​தது. இது​குறித்து சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் பி.டி.அரசகுமார், முன்​னாள் எம்​எல்ஏ முத்​துக்​குமார், முன்​னாள் பள்​ளிக் கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ், சரவணன், ராஜா, சுரேஷ், தினேஷ் உள்​ளிட்​டோர் மீது வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். இதில், பி.டி.அரசகுமார் ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்த வழக்​கில் கடந்த அக்​டோபர் 26-ம் தேதி கைது செய்​யப்​பட்ட முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ், நீதி​மன்ற காவலில் சிறை​யில் உள்​ளார். கடந்த அக்​டோபர் 29 அன்று நீதி​மன்​றத்​தில் சரணடைந்த முத்​துக்​குமார் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். சரவணன், தினேஷ் தவிர்த்து மற்​றவர்​கள் கைதாகி ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில், அன்​பில் மகேஸூக்கு ஜாமீன் கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மனு மீதான விசா​ரணை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எல்.எஸ்.சத்​தி​யமூர்த்தி முன்​னிலை​யில் கடந்த 5-ம் தேதி நடந்​தது. அப்​போது அன்​பில் மகேஸ் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் அபுடுகுமார் ராஜரத்​தினம், வழக்​கறிஞர் ரிச்​சர்ட்​ஸன் வில்​சன் ஆகியோ​ரும், காவல் துறை தரப்​பில் மாநில அரசு தலைமை குற்​றவியல் வழக்​கறிஞர் ஆர்.ஜான் சத்​யன் மற்​றும் சிறப்பு அரசு குற்​றவியல் வழக்​கறிஞர் கே.உஷா ராணி ஆகியோ​ரும் ஆஜராகி வாதிட்​டனர். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி எல்.எஸ். சத்​தி​யமூர்த்தி தீர்ப்பை 10-ம் தேதிக்கு (நேற்று) தள்ளி வைத்தார்.

இந்நிலையில், அன்​பில் மகேஸின் ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். நீதிபதி பிறப்​பித்​துள்ள விரிவான உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் உள்​ளிட்ட அனுமதி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி பி.டி.அரசகுமாரும், முத்​துகுமாரும் தனியார் பள்ளி நிர்​வாகி​களிடம் இருந்து கோடிக்​கணக்​கில் பெரும் தொகையை வசூலித்து, அதை கட்சி நிதி என்ற பெயரில் பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சராகப் பதவி வகித்த அன்​பில் மகேஸிடம் லஞ்​ச​மாக கொடுத்​துள்​ளனர் என குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்​கில் சாட்​சிகளாகச் சேர்க்​கப்​பட்​டுள்ள தனியார் பள்ளி நிர்​வாகி​கள் அளித்த வாக்​குமூலத்​தின் அடிப்​படை​யில், அன்​பில் மகேஸ் மீதான குற்​றச்​சாட்டுகளுக்கு ஆரம்​பகட்ட முகாந்​திரம் உள்​ளது. அன்​பில் மகேஸ், அவரது மனைவி ஜனனி மற்​றும் அமெரிக்​கா​வில் உள்ள அவரது மாமியார் லதா கைலாசம் ஆகியோர் 2015-16 முதல் தற்​போது வரை​யுள்ள 10 ஆண்​டுகளுக்​கான வரு​மான வரி கணக்​கு​களைச் சமர்ப்​பிக்க போலீ​ஸார் நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளனர்.

அதில், ஆடிட்​டர்​களின் மாற்​றம் காரண​மாக குறிப்​பிட்ட சில ஆண்​டுகளுக்​கான வரு​மான வரி கணக்​கு​கள் மட்​டுமே தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ள​தாகவும், எஞ்​சிய கணக்கு விவரங்​களும் விரைவில் தாக்​கல் செய்​யப்​படும் என மனுதா​ரர் தரப்​பில் உறுதி​யளிக்​கப்​பட்​டுள்​ளது.

லஞ்​சம் கொடுக்​கா​விட்​டால் 10 மற்​றும் 12-ம் வகுப்பு மாணவர்​களைத் தேர்​வெழுத அனுமதிக்​க​மாட்​டோம் என அரசகுமாரும் முத்​துக்​குமாரும் தனியார் பள்ளி நிர்​வாகி​களை மிரட்​டிய​தாகவும், இது​வரை ரூ.17.26 கோடிக்​கான நிதிப் பரிவர்த்​தனை விவரங்​கள் ஆதா​ரப்​பூர்​வ​மாக கண்​டறியப்​பட்​டுள்​ள​தாகவும் காவல் துறை தரப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

அன்​பில் மகேஸின் வீட்​டில் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்ள மின்​னணு மற்​றும் டிஜிட்​டல் ஆவணங்​கள் தடய​வியல் துறை​யின் ஆய்​வுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளன. வழக்​கின் புலன் விசா​ரணை ஆரம்​பகட்​டத்​தில் உள்​ளது. மோசடி, மிரட்​டல், கட்சி நிதி என்ற பெயரில் பெரும் தொகையை வசூலித்து இருப்​பது மிகப்​பெரிய பொருளாதார குற்​றம்.

அமைச்​சராக பதவி வகித்த அன்​பில் மகேஸ், அரசகுமாரின் குற்​றப் பின்​னணி, அன்​பில் மகேஸின் கைதுக்​குப் பிறகு திடீரென முத்​துக்​குமார் தானாக முன்​வந்து நீதி​மன்​றத்​தி்ல் சரண் அடைந்​திருப்​பது இந்த குற்ற வழக்​கின் தீவிரத்​தைக் காட்​டு​கிறது. மிரட்டி, கட்​டாயப்​படுத்தி லஞ்​சம் வசூலித்​துள்​ள​தாகக் கூறப்​படுவ​தால், இந்​தச் சூழலில் தனியார் பள்ளி நிர்​வாகி​களை ஆரம்ப கட்​டத்​திலேயே ஊழல் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் இணை குற்​றவாளி​களாகக் கருத முடி​யாது.

இந்த வழக்​கில் மேலும் சிலரை கைது செய்ய வேண்​டி​யிருப்​ப​தாகவும், சமுதாயத்​தில் அரசி​யல் பின்​புலத்​துடன் கூடிய செல்​வாக்கு மிக்க நபரான அன்​பில் மகேஸூக்கு ஜாமீன் வழங்​கினால் அது புலன் விசா​ரணையை வெகு​வாக பாதிக்​கும் என்​றும், சரண்​டராகி​யுள்ள முத்​துக்​குமாரை காவலில் எடுத்து விசா​ரிக்​கும் போது அவரிடம் பெறப்​படும் தகவல்​களின் அடிப்​படை​யில் அன்​பில் மகேஸிடம் மீண்​டும் விசா​ரணை நடத்த வேண்​டும் என்ற காவல் துறை​யின் வாதத்​தையும் புறம் தள்​ளி​விட முடி​யாது.

பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சராக பதவி வகித்த அன்​பில் மகேஸின் தனிப்​பட்ட நலனை விட பள்ளி மாணவர்​களின் கல்வி மற்​றும் பொதுநலனே முக்​கிய​மானது. எனவே தற்​போதுள்ள சூழலில் அன்​பில் மகேஸுக்கு ஜாமீன் வழங்க முடி​யாது. இவ்​வாறு நீதிபதி தனது உத்​தர​வில் கூறியுள்​ளார்.

இதற்​கிடையே இந்த வழக்​கில் சரணடைந்​துள்ள முன்​னாள் எம்​எல்ஏ முத்​துக்​குமாரை 5 நாட்​களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசா​ரிக்க அனுமதி கோரி போலீ​ஸார் சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT