தமிழகம்

36 ஆயிரம் ஏரிகளை தூர்வார நடவடிக்கை: நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழகத்​தில் உள்ள 36 ஆயிரம் ஏரி​களை தூர்​வார நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது’ என்று நீர்​வளத்​துறை அமைச்​சர் என்​.ஆனந்த் தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று பட்​ஜெட் மீதான விவாதத்​தில் பாமக உறுப்​பினர் சவுமியா அன்​புமணி பேசும்​போது, “தமிழகத்​தில் உள்ள பெரிய ஆறுகளில் தடுப்​பணை கட்​டி​னால் கடலில் கலக்​கும் நீரை தடுக்க முடி​யும். தண்​ணீரை சேமிக்​கலாம்.

அதே​போல், ஏரி​களை தூர்​வாரி​னால் தண்​ணீரை தேக்கி வைக்க முடி​யும். விவ​சா​யிகளுக்​காக ஒதுக்​கப்​படும் மானி​யங்​கள் முறை​யாக விவ​சா​யிகளுக்​குச் சென்று சேர​வில்லை என்று அரசு அதி​காரி​களின் மீதும் விவ​சா​யிகள் குற்​றச்​சாட்டை முன்​வைக்​கின்​றனர்.

டாஸ்​மாக் மதுக்​கடைகளை படிப்​படி​யாக மூடி பெண்​களின் மகிழ்ச்​சியை உறுதி செய்ய வேண்​டும். தரு​மபுரி மாவட்​டத்​துக்கு காவிரி உபரி நீரைக் கொண்டு வரவேண்​டும். விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்த வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.

அதற்​குப் பதில் அளித்த நீர்​வளத்​துறை அமைச்​சர் என்​.ஆனந்த், “கடந்த காலங்​களை​விட நீர்​வளத்​துறைக்கு அதிக நிதியை முதல்​வர் ஒதுக்​கி​யுள்​ளார். தனி​யார் பங்​களிப்​புடன் ஏரி, குளங்​களைத் தூர்​வாரும் பணி​களுக்கு அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

சென்​னை​யில் அடை​யாறு, கூவம் உள்​ளிட்ட ஆறுகள் மற்​றும் தமிழகத்​தில் ஊரக வளர்ச்​சித் துறை​யில் உள்ள 22 ஆயிரம் ஏரி​கள், நீர்​வளத் துறை​யில் உள்ள 14 ஆயிரம் ஏரி​களைத் தூர்​வார நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. விவ​சா​யிகளின் கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​படும். தரு​மபுரி மாவட்​டத்​துக்கு அனைத்​தும் செய்து கொடுக்​கப்​படும்​” என்​று தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT