தமிழகம்

மடிக்கணினிகள் வழங்கிய விவரத்தை சமர்ப்பிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக்​கல்வி இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்:

2014-15 முதல் 2020-21-ம் ஆண்டு வரை பள்ளி மாணவர்​களுக்கு மடிக்​கணினி வழங்​கப்​பட்ட விவரங்​களை இந்​திய கணக்​காய்வு மற்​றும் தணிக்​கைத் துறை கோரி​யுள்​ளது. இதையடுத்து அந்த ஆண்​டு​களில் மாணவர்​களுக்கு வழங்​கு​வதற்​காக மடிக்​கணினிகள் கொள்​முதல் செய்யப்​பட்ட நாள் மற்​றும் அவை பள்​ளி​களுக்கு விநி​யோகிக் கப்​பட்ட நாள் ஆகிய விவரங்​களை இயக்​குநரகத்​துக்கு அனுப்​பிவைக்க வேண்​டும்.

அதே​போல், தகு​தி​யான எந்​தவொரு மாணவராவது விடு​பட்டிருந்தால் அதன் விவரத்தையும் தர வேண்டும்.

SCROLL FOR NEXT