தமிழகம்

புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களில் 119 பேர் கோடீஸ்வரர்கள்

291 பேரில் 66 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவை

செய்திப்பிரிவு

புதுச்​சேரி: புதுச்​சேரி பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்​பாளர்​களில் 119 பேர் கோடீஸ்​வரர்​கள். அதிக சொத்​தும், அதிக கடனும் உள்ள முதல் 3 வேட்​பாளர்​கள் என்​டிஏ கூட்​ட​ணியைச் சேர்​தவர்​கள்.

இதுதொடர்​பாக புதுச்​சேரி தேர்​தல் கண்​காணிப்​பகம் ஒருங்​கிணைப்​பாளர் ஜோசப் விக்​டர் ராஜ் வெளி​யிட்ட அறிக்​கை: புதுச்​சேரி தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​கள் தாக்​கல் செய்​யும் பிர​மாண பத்​திரங்களை தேர்​தல் கண்​காணிப்​பகம் ஆய்வு செய்து அறிக்​கைகளை, கடந்த 2011 முதல் 6 தேர்​தல்​களாக வெளி​யிட்டு வரு​கிறது.

          

புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 30 தொகு​தி​களில் 294 பேர் போட்​டி​யிடு​கின்​றனர். அதில் 291 பேரின் சுய உறு​தி​மொழி வாக்​குமூலம் ஆய்வு செய்​யப்​பட்​டன.

இதில் 34 வேட்​பாளர்​கள் தேசி​யக் கட்​சிகளை​யும், 63 பேர் மாநில கட்​சிகளை​யும், 80 வேட்​பாளர்​கள் பதிவு செய்​யப்​பட்ட அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்​சிகளை​யும், 117 வேட்​பாளர்​கள் சுயேச்​சை​யாக போட்​டி​யிடு​கின்​றனர்.

வேட்​பாளர்​களில் ஆய்வு செய்​யப்​பட்ட 291 பேரில் 66 பேர் (23 சதவீதம்) மீது கிரிமினல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. 28 பேர் (13 சதவீதம்) மீது கொலை, கொலை முயற்​சி, திருட்​டு, பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் போன்ற கடும் கிரிமினல் வழக்​கு​கள் உள்​ளன.

இதில் 2 வேட்​பாளர்​கள் மீது கொலை வழக்​கும், 3 பேர் மீது பாலியல் வன்​கொடுமை வழக்​கு​களும் உள்​ளது குறிப்பிடத்தக்கது.

காங்​கிரஸ் வேட்​பாளர்​களில் 3 பேர் மீதும், என்​ஆர்​காங்​கிரஸில் 4 பேர் மீதும், பாஜக​வில் 5 பேர் மீது்ம், திமுக​வில் 6 பேர் மீதும், அதி​முக​வில் ஒரு​வர் மீதும் கிரிமினல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. வேட்​பாளர்​களில் 119 பேர் அதாவது 41 சதவீதம் பேர் கோடீஸ்​வரர்​கள்.

என்​ஆர்​காங்​கிரஸ், பாஜக, லஜக​வில் 100 சதவீத பேரும், காங்​கிரஸில் போட்​டி​யிடும் 21 பேரில் 17 பேரும் கோடீஸ்​வர்​களாக உள்​ளனர். புதுச்​சேரி வேட்​பாளர்​களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7.21 கோடியாக உள்ளது.

வேட்​பாளர்​களில் லஜக வேட்​பாளர் ஜோஸ்​சார்​லஸ் மார்​டின் ரூ.609 கோடி சொத்​துகளு​டன் முதலிடத்​தி​லும், பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் ரூ.115 கோடிகளுடன் 2-ம் இடத்திலும், அமைச்சர் நமச்சிவாயம் ரூ.85 கோடியுடன் 3-ம் இடத்திலும் உள்ளனர்.

அதிக கடன் உள்​ளவர்​களில் ஜோஸ் சார்​லஸ் ரூ.210 கோடிகளு​டன் முதலிட​மும், ராமலிங்​கம் ரூ.30 கோடிகளு​டன் 2-ம் இடமும், நமச்​சி​வா​யம் ரூ. 20 கோடிகளு​டன் 3-ம் இடத்​தி​லும் உள்​ளனர்.

அதே​போல் அதிக ஆண்டு வரு​வாய் உள்​ளோரில் ஜோஸ் சார்​லஸ் முதலிடத்​தி​லும் (ஆண்​டுக்கு ரூ.59 கோடி), பாமக கோபால​கிருஷ்ணன் (ரூ. 6 கோடி) இரண்​டாம் இடத்​தி​லும், சுயேச்சை வேட்​பாளர் வசந்​த கு​மார் ரூ.1 கோடி​யுடன் 3-ம் இடத்​தி​லும் உள்​ளனர்.

வேட்​பாளர்​களில் 134 பேர் பட்​டப்​படிப்​பும் அதற்கு மேல் படித்​தவர்​கள். 125 வேட்​பாளர்​கள் 5 முதல் 12-ம் வகுப்பு படித்​தவர்​கள். 25 பேர் பட்​டயப்​படிப்​பும், 4 பேர் படிக்​காதவர்​களாக உள்​ளனர். வேட்​பாளர்​களில் 61 முதல் 80 வயதுக்கு உடைய​வர்​கள் 53 பேர்.

அதே போல் 41 முதல் 60 வயது வரை 165 பேர் உள்​ளனர்​. 25 முதல் 40 வயது வரை 73 பேர்​ உள்​ளனர்​. இம்​முறை மொத்​தம்​ 40 பெண்​கள்​ போட்​டி​யிடு​கின்​றனர்​. இது 14 சதவீதம்​ ஆகும்​. இவ்​​வாறு அவர் குறிப்​பிட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT