

மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடப்பது நல்லது. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் இழுபறியாகயிருந்த பணியை முடிப்பீர்.
ரிஷபம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்.
மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
கடகம்: அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு கூடும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
சிம்மம்: குடும்பத்திலும் சரி, வெளிவட்டாரத்திலும் சரி யாரையும் குறை சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதம் கூடும். வாகனம் செலவு வைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளுக்கு பதிப்பு அளிக்கவும். லாபம் உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர்.
துலாம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவர். ஈகோ பிரச்சினை, கருத்து வேறுபாடு விலகி தம்பதிக்குள் நெருக்கம் கூடும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிட்டும்.
விருச்சிகம்: பணப் பற்றாக்குறை நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
தனுசு: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். குடும்பத்தில் அமைதி நிலவும். மூத்த சகோதரர்கள் பாசமாக இருப்பர். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். லாபம் கிடைக்கும். பயணத்தால் ஆதாயமுண்டு.
மகரம்: வெளிவட்டாரத்தில் கவுவப் பதவி தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு கூடும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். வியாபாரம் சிறக்கும்.
கும்பம்: அலைச்சல், காரியத் தடை வரலாம். யாருக்கும் எவ்விதத்திலும் உறுதிமொழி அளிப்பதை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை தாமதப்படுத்தவும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்புகள் அதிகரிக்கும்.
மீனம்: திட்டமிட்ட வேலையை முடிக்க பாடுபடுவீர். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து செயல்படுத்துவீர். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.