தமிழகம்

ஊதிய உயர்வு வழங்காத மாநகராட்சி: கருப்பு உடையில் பணிக்கு வந்த அம்மா உணவக ஊழியர்கள்

செய்திப்பிரிவு

சென்னை: மாநகராட்சி நிர்​வாகம் ஊதிய உயர்வு வழங்​காததைக் கண்​டித்து அம்மா உணவக ஊழியர்​கள் நேற்று கருப்பு உடை அணிந்து பணிக்கு வந்​தனர்.

அம்மா உணவக ஊழியர்களுக்கு கடந்த 2013-ல் நிர்​ண​யிக்​கப்​பட்ட ஊதி​யமே 2021-ம் ஆண்டு வரை வழங்​கப்​பட்டு வந்​தது. அதன் பிறகு சிறு தொகை ஊதிய உயர்​வாக வழங்​கப்​பட்​டது. அதன் பிறகு எந்த ஊதிய உயர்​வும் வழங்​கப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், சென்னை பொது தொழிலா​ளர் சங்​கம் (சிஐடி​யு) பொதுச்​செய​லா​ளர் ஆர்​.லோக​நாதன், அம்மா உணவக ஊழியர்​களுக்கு ஊதிய உயர்வு கோரி மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரனிடம் மனு அளித்​திருந்​தார்.

இது தொடர்​பாக நேற்று நடை​பெற்ற மாமன்ற கூட்​டத்​தில், நிறைவேற்​றப்பட இருந்த தீர்​மானங்​களில், அம்மா உணவக ஊழியர்​களின் ஊதிய உயர்வு தொடர்​பாக எந்த அம்​ச​மும் இல்​லை.

இந்​நிலை​யில், ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்​காத மாநக​ராட்சி நிர்​வாகத்தை கண்​டித்​து, அம்மா உணவக ஊழியர்​கள் பலர் கருப்பு உடை அணிந்து நேற்று பணிக்கு வந்திருந்தனர்.

SCROLL FOR NEXT