அமித் ஷா

 
தமிழகம்

சிஜேபி போராட்டம் தீவிரம்: அமித் ஷாவின் தமிழகம், புதுச்சேரி பயணம் ரத்து

செய்திப்பிரிவு

சென்னை/ புதுச்சேரி: டெல்​லி​யில் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​யினரின் (சிஜேபி) போராட்​டம் தீவிரம் அடைந்​துள்​ள​தால், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் தமிழகம், புதுச்​சேரி பயணம் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.

புதுச்​சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலை​வரின் உயரிய வண்ண விருது (President's Police Colour Award) அறிவிக்​கப்​பட்​டது. காவல் துறை​யின் நீண்​ட​கால சிறப்​பான சேவை, ஒழுக்​கம் மற்​றும் மக்​கள் பாது​காப்​பில் ஆற்​றிய பங்​களிப்பை அங்​கீகரிக்​கும் வகை​யில் இந்த உயரிய விருது புதுச்​சேரி காவல் துறைக்கு வழங்​கப்​படு​கிறது.

இதற்​கான விழா புதுச்​சேரி கோரிமேட்​டில் உள்ள காவல் மைதானத்​தில் இன்று மாலை நடை​பெற இருந்​தது. விழா​வில், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா பங்​கேற்​று, காவல் துறைக்கு குடியரசுத் தலை​வரின் வண்ண விருதை வழங்கி கவுர​விப்​பார் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதற்​கான ஏற்​பாடு​கள், பாது​காப்பு நடவடிக்​கைகள் தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வந்​தன.

அதன்​படி, கர்​நாடக மாநிலம் ஹூப்​ளி​யில் இருந்து இன்று தனி விமானத்​தில் சென்னை வந்​து, இங்​கிருந்து தனி ஹெலி​காப்​டரில் புதுச்​சேரிக்கு அமித் ஷா செல்ல திட்​ட​மிடப்​பட்​டிருந்​தது.

புதுச்​சேரி​யில் விழாவை முடித்​துக் கொண்டு தனி ஹெலி​காப்​டரில் சென்​னைக்கு வரு​வ​தாக​வும், சென்​னை​யில் கட்​சி​யின் முக்​கிய நிர்​வாகி​களை சந்​தித்து ஆலோ​சனை நடத்​திய பிறகு, தனி விமானத்​தில் டெல்லி திரும்​புவ​தாக​வும் அமித் ஷாவின் பயணத் திட்​டம் வகுக்​கப்​பட்​டிருந்​தது. அவரது வரு​கையை முன்​னிட்டு சென்னை விமான நிலை​யத்​தில் பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்த ஆலோ​சனை கூட்​ட​மும் நேற்று நடை​பெற்​றது.

இதற்​கிடையே, டெல்​லி​யில் சிஜேபி நடத்தி வரும் போராட்​டங்​கள் தீவிரம் அடைந்​துள்​ளன. போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிக்​கப்​பட்​டுள்​ளதோடு, டெல்​லி​யில் மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் தற்​காலிக​மாக மூடப்​பட்டு, டெல்லி முழு​வதும் பதற்ற நிலை நில​வு​கிறது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்​கம் என பல்​வேறு மாநிலங்​களில் போராட்​டம் விரிவடைந்து வரு​கிறது. இதன் காரணமாக, உள்துறை அமைச்சர் அமித்​ ஷா​வின் தமிழகம், புதுச்​சேரி பயணம்​ ரத்​து செய்​யப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT