தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
தூத்துக்குடி: அனைத்து அமைச்சர்களும் ‘வாங்க’ தொடங்கிவிட்டார்கள். இதுதொடர்பான பட்டியல் எங்களிடம் இருக்கிறது, விரைவில் வெளியிடுவோம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, கர்நாடக மாநில நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக் கூடாது என அம்மாநில முதல்வர் கூறியிருக்கிறார். யாராக இருந்தாலும் அவர்களை சுட்டுக் கொல்ல, ஒரு உயிரைப் பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது. அவருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
அனைத்து அமைச்சர்களும் வேலையை தொடங்கி விட்டார்கள். வேலையை தொடங்கிவிட்டார்கள் என்றால் அதற்கான அர்த்தம் உங்களுக்கு தெரியும். எல்லோருமே வாங்கத் தொடங்கி விட்டார்கள். யார், யார் எங்கே வாங்குகிறார்கள், எல்லா லிஸ்ட்டும் எங்கள் கையில் இருக்கிறது. எல்லா விஷயத்தையும் வெகு
விரைவில் வெளியிடுவோம். தவெக அரசின் நூறு நாள் என்பது மக்களுக்கான வேதனையான நாட்களாகத் தான் கருதுகிறேன். எல்லா விஷயங்களையும் தொடங்கி விட்டார்கள்.