தமிழகம்

மாநிலங்களவை தேர்தல்: திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்

மார்ச் 9-ம் தேதி மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்

செய்திப்பிரிவு

சென்னை: ​மாநிலங்​களவை உறுப்​பினர் தேர்​தலில் திமுக கூட்​டணி வேட்​பாளர்​கள் 4 பேர், அதி​முக கூட்​டணி வேட்​பாளர்​கள் 2 பேர் என மொத்​தம் 6 பேரின் வேட்​புமனுக்​களும் ஏற்​கப்​பட்​டன. ராம​தாஸ் ஆதர​வாளர் உள்​ளிட்ட மற்ற அனை​வரது மனுக்​களும் நிராகரிக்​கப்​பட்​ட​தால், மேற்​கண்ட 6 பேரும் போட்​டி​யின்றி தேர்​வாவது உறு​தி​யாகி​யுள்​ளது.

தமிழகத்​தில் இருந்து மாநிலங்​களவைக்கு தேர்​வான திமுக​வின் திருச்சி சிவா, அந்​தி​யூர் செல்​வ​ராஜ், என்​.ஆர்​.இளங்​கோ, கனி​மொழி சோமு, அதி​முக​வின் தம்​பிதுரை மற்​றும் அதி​முக கோட்​டா​வில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட தமா​கா​வின் ஜி.கே.​வாசன் ஆகியோரின் 6 ஆண்டு பதவிக் காலம் ஏப்​ரல் 2-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது.

          

இதையொட்​டி, 6 புதிய மாநிலங்​களவை உறுப்​பினர்​களை தேர்ந்​தெடுக்க மார்ச் 16-ம் தேதி தேர்​தல் நடை​பெறும் என்று இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் கடந்த பிப்​.18-ம் தேதி அறி​விப்பு வெளி​யிட்​டது. தேர்​தல் ஆணைய அறிவிக்​கை​யின்​படி, வேட்​புமனு தாக்​கல் கடந்த பிப்​.26-ம் தேதி தொடங்​கியது. திமுக கூட்​ட​ணி​யில், திமுக சார்​பில் அக்​கட்​சி​யின் மாநிலங்​களவைக் குழு தலை​வர் திருச்சி சிவா, செய்​தித் தொடர்பு பிரிவு செய​லா​ளர் கான்​ஸ்​டன்​டைன் ரவீந்​திரன், காங்​கிரஸ் சார்​பில் கிறிஸ்​டோபர் திலக், தேமு​திக பொருளாளர் எல்​.கே.சுதீஷ் ஆகியோர் வேட்​புமனு தாக்​கல் செய்​தனர்.

அதி​முக கூட்​ட​ணி​யில் அதி​முக சார்​பில் முன்​னாள் மத்​திய அமைச்​சர் தம்​பிதுரை. பாமக தலை​வர் அன்​புமணி ஆகியோர் வேட்​புமனு தாக்​கல் செய்​தனர். மேலும், பாமக நிறு​வனர் ராம​தாஸ் தரப்​பில் ப.சு​வாமி​நாதன் உள்​ளிட்ட 6 சுயேச்சை வேட்​பாளர்​கள் வேட்​புமனு தாக்​கல் செய்​தனர். வேட்​பு மனு தாக்​கல் கடந்த 5-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது.

இந்​நிலை​யில், சென்னை தலை​மைச் செயல​கத்​தில், தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் முன்​னிலை​யில், தேர்​தல் நடத்​தும் அதி​காரி இரா.​சாந்​தி, உதவி தேர்​தல் நடத்​தும் அதி​காரி பி.தேன்​மொழி ஆகியோர் வேட்​புமனுக்​களை நேற்று பரிசீலனை செய்​தனர்.

அப்​போது, அன்​புமணி​யின் வேட்​புமனுவை ஏற்​கக்​கூ​டாது என்று சுவாமி​நாதன் ஆட்​சேபம் தெரி​வித்​தார். அன்​புமணி பாமக​வின் தலை​வர் இல்லை என்​ப​தற்​கான நீதி​மன்ற உத்​தரவு மற்​றும் தேர்​தல் ஆணைய பதில்​கள் அடங்​கிய ஆட்​சேப மனுவை வழங்​கி​னார். அவரது ஆட்​சேபங்​களை நீதி​மன்​றம் அல்​லது தேர்​தல் ஆணை​யத்​திடம் தெரிவிக்​கலாம் என்று தேர்​தல் அதி​காரி​கள் அறி​வுறுத்​தினர்.

இதைத் தொடர்ந்​து, திமுக கூட்​ட​ணியை சேர்ந்த 4 பேர், அன்​புமணி உள்​ளிட்ட அதி​முக கூட்​டணி வேட்​பாளர்​கள் 2 பேர் என மொத்​தம் 6 பேரின் வேட்​புமனுக்​கள் ஏற்​கப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. எம்​எல்​ஏக்​களின் முன்​மொழிவு கடிதங்​கள் இல்​லாத​தால், பாமக​வின் சுவாமி​நாதன் உள்​ளிட்ட 6 சுயேச்சை வேட்​பாளர்​களின் மனுக்​களும் நிராகரிக்​கப்​பட்​டன.

தமிழகத்​தில் காலி​யாகும் 6 இடங்​களுக்கு 6 பேரின் வேட்​புமனுக்​கள் மட்​டுமே ஏற்​கப்​பட்​டுள்​ள​தால், வாக்​குப்​ப​திவு நடை​பெறாது. எனினும், வேட்​புமனுக்​களை திரும்ப பெற மார்ச் 9-ம் தேதி வரை அவகாசம் உள்​ளதால், அன்​று மாலை வேட்​பாளர்​கள்​ 6 பேரும்​ போட்​டி​யின்​றி தேர்​வு செய்யப்​படுவதாக அறி​விக்​கப்​படு​வார்​கள்​.

அன்புமணி மனுவை எதிர்த்து மேல்முறையீடு: ராமதாஸ் தரப்பு தகவல்

மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பாமக வழக்கறிஞர் பாலு கூறியதாவது: பாமக தலைவர் அன்புமணியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ‘‘தேர்தல் விதிகளில் உள்ள அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் வேட்புமனுவை ஏற்றுக்கொள்கிறேன். உங்களுக்கு ஆட்சேபம் இருந்தால், நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையத்தை நாடலாம்’’ என்று தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அன்புமணியின் வீட்டில் உதவியாளராக இருந்த சுவாமிநாதனை ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளார். தேர்தல் விதிப்படி பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் முன்மொழிந்து கையெழுத்திட ஒரு எம்எல்ஏகூட இல்லாத நிலையில், அன்புமணியை அசிங்கப்படுத்த வேண்டும், அவரது புகழுக்கு இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்களில் இனி ராமதாஸ் ஈடுபட வேண்டாம். அன்புமணியின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இனி வருங்காலத்தில், அன்புமணி தலைமையில், அவர் வழங்கும் சான்று அடிப்படையில், தேர்தலில் ‘மாம்பழம்’ சின்னத்தை பெற்று போட்டியிட எந்த தடையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் சுவாமிநாதன் கூறும்போது, ‘‘வேட்புமனு பரிசீலனையில் வெளிப்படைத் தன்மை இல்லை. அன்புமணி பாமக தலைவரே இல்லை. போலியான ஆவணத்தை வழங்கி, தனது பதவிக் காலத்தை நீட்டித்துள்ளார். அது தொடர்பான ஆதாரங்களை வழங்கி,அவரது மனுவை ஏற்கக் கூடாது என வாதிட்டோம்.

ஆவணத்தை ஆய்வு செய்யாமல், அன்புமணியின் மனுவை ஏற்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அன்புமணியின் மனுவை நிராகரிக்கும் வரை போராட்டம் தொடரும்’’ என்றார்.

SCROLL FOR NEXT