அஜித்குமார்

 
தமிழகம்

அஜித்குமார் மரண வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்

டிஎஸ்பி உட்பட 4 பேரை கைது செய்து விசாரிக்கவும் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கு விசா​ரணையை 6 மாதங்​களில் முடிக்​க​வும், டிஎஸ்பி உட்பட 4 பேரை கைது செய்து விசா​ரிக்​க​வும் உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்குமார். இவரை கடந்த ஆண்டு ஜூன் 27-ல் நிகிதா என்​பவர் அளித்த நகை திருட்டு புகார் தொடர்​பாக தனிப்​படை காவலர்​கள் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்​றனர்.

          

விசா​ரணை​யின்​போது, தனிப்​படை காவலர்​கள் தாக்​கிய​தில் அஜித்குமார் உயி​ரிழந்​தார். தனிப்​படை காவலர்​கள் கண்​ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணி​கண்​டன் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். பின்​னர் விசா​ரணை சிபிஐக்கு மாற்​றப்​பட்​டது.

சிபிஐ தாக்​கல் செய்த குற்​றப்பத்​திரி​கை​யில் தனிப்​படை வேன் ஓட்​டுநர் ராமச்​சந்​திரன், மானாமதுரை சரக டிஎஸ்​பி​யாக இருந்த சண்​முகசுந்​தரம், திருப்​புவனம் ஆய்​வாளர் ரமேஷ்கு​மார், உதவி ஆய்​வாளர் சிவக்​கு​மார், தலை​மைக் காவலர் இளை​ய​ராஜா ஆகியோரின் பெயர்​கள் சேர்க்​கப்​பட்​டன. டிஎஸ்பி உட்பட 4 பேரும் பிப். 25-ல் விசா​ரணை நீதி​மன்​றத்​தில் ஆஜராக உத்​தர​விடப்​பட்டது.

இந்​நிலை​யில் தனிப்​படை காவலர்​கள் கண்​ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணி​கண்​டன் ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனுக்​கள் நீதிபதி எஸ்​.மதி முன்​னிலை​யில் நேற்று விசாரணைக்கு வந்​தது.

சிபிஐ வழக்​கறிஞர் வாதிடு​கை​யில், அஜித்குமார் வழக்​கில் 94 சாட்​சிகள் விசா​ரிக்​கப்​பட்​டுள்​ளனர். அஜித்குமார் நகையை திருடியதற்கு ஆதா​ரங்​கள் இல்​லை. டிஎஸ்​பியை தவிர்த்து பிற உயர் அதி​காரி​களுக்கு தொடர்​பிருப்​ப​தாக தெரிய​வில்​லை.

அஜித்​கு​மாரை தனிப்​படை காவலர்​கள்​தான் அடித்​துக் கொலை செய்​துள்​ளனர் என்​ப​தற்கு போதிய ஆதா​ரங்​கள் உள்​ளன. எனவே, தனிப்​படை காவலர்​களுக்கு ஜாமீன் வழங்​கக் கூடாது என்று கோரி​னார்.

இதையடுத்து நீதிப​தி, காவல்​துறை​யினர் மனசாட்​சி​யுடன் செயல்பட வேண்​டும். உயர் அதி​காரி உத்​தர​விட்​டால் ஒரு​வரை அடித்​துக் கொலை செய்​வார்​களா? அடிக்க முடி​யாது என அதி​காரி​யிடம் காவலர்​கள் சொல்ல மறுப்​பது ஏன்? உங்​கள் மீது உயர் அதி​காரி நடவடிக்கை எடுத்​தால் நீதி​மன்​றம் வாருங்​கள். நீதி​மன்​றம் உங்​களை பாது​காக்​கும்.

இந்த வழக்​கில் போலீஸார் செய்த குற்றம் மன்​னிக்க முடி​யாதது. டிஎஸ்பிக்கு உத்தர​விட்ட அதி​காரி யார் என்​பதை கண்டு​ பிடிக்க முடியாததால், உத்​தர​விட்ட அதிகாரி பாது​காக்​கப்​பட்டு வரு​வது தெரி​கிறது.

இந்த வழக்கை விசா​ரணை நீதி​மன்​றம் 6 மாதங்​களில் முடிக்க வேண்​டும். தேவைப்​பட்​டால் குற்​றப் பத்​திரிக்​கை​யில் சேர்க்​கப்​பட்டு இன்​னும் கைது செய்​யப்​ப​டா​மல் இருக்​கும் டிஎஸ்பி உட்பட காவல்​துறை அதி​காரி​கள் 4 பேரை​யும் கைது செய்து விசா​ரிக்​கலாம். ஜாமீன் மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​படு​கின்றன என உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT