மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 பிப்ரவரி 2026
மேஷம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
ரிஷபம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்.
மிதுனம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை ஏற்கவும். பேச்சில் கவனம் தேவை. வாகனம் செலவு வைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். விவாதங்களை தவிர்க்கவும். பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.
சிம்மம்: சகோதர வகையில் உதவி கிட்டும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கன்னி: எதிர்பாராத பணவரவால் மனமகிழ்ச்சி உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்கவும். வியாபாரம் சிறக்கும்.
துலாம்: திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. மனதில் இருந்த பயம்விலகும். பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரி வீட்டு விசேஷங்களில் பங்கேற்கும் அளவுக்கு நெருக்கமாவீர்.
விருச்சிகம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர், நண்பர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
தனுசு: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். செலவை குறைத்து சேமிக்கும் எண்ணம் உருவாகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம்.
மகரம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல் இருக்கும். அக்கம் பக்கத்தினர், குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகவும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்.
கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.
மீனம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
