தமிழகம்

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம்: விரைவில் ஒப்புதல் என எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ​வி​மான நிலை​யம் - கிளாம்​பாக்​கம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்​கை​யை, மத்​திய நகர்ப்​புற மேம்​பாட்​டுத் துறை அமைச்​சகம் பரிசீலனை செய்து வரு​வ​தாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

சென்​னை​யில் முதல்​கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் முடிந்​து, விம்கோ நகர் - விமான நிலை​யம் வரை​யும், சென்ட்​ரல் - பரங்​கிமலை வரை​யும் 2 வழித்​தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இதையடுத்து 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணி​கள் 116.1 கி.மீ. தொலை​வுக்கு 3 வழித்​தடங்​களில் நடை​பெறுகின்றன. மேலும், முதல்​கட்ட திட்​டத்​தின் நீட்​டிப்​பாக விமான நிலை​யம் முதல் கிளாம்​பாக்​கம் புதிய பேருந்து நிலை​யம் வரை 15.5 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க முடிவு செய்​யப்​பட்​டது.

பாலம் வடிவ​மைப்​பு, நிலம் ஒதுக்​கு​வ​தில் இருந்த பிரச்​சினைக்கு தீர்வு காணப்​பட்​டு, சிறு திருத்​தத்​துடன் புதிய திட்ட அறிக்கை தயாரிக்​கப்​பட்​டது. தமிழக அரசு ஒப்​புதல் கிடைத்​தவுடன் மத்​திய அரசின் ஒப்​புதல் பெற கடந்த ஆண்டு மே மாதம் அனுப்​பப்​பட்​டது.

இதில் ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து செயல்​பாட்டு திட்​டத்தை இணைத்து அனுப்ப வேண்​டும் என மத்​திய அரசு அறி​வுறுத்​தி​யது. பின்​னர் விரி​வான திட்ட அறிக்​கை​யில், அடுத்த 5 ஆண்​டுக்​கான ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து செயல்​பாட்டு திட்​டத்​தை​யும் இணைத்​து, கடந்த ஆண்டு ஜூலை​யில் மெட்ரோ நிர்​வாகம் அனுப்​பியது.

இந்​நிலை​யில் இந்த திட்ட அறிக்​கை​யை, மத்​திய நகர்ப்​புற மேம்​பாட்​டுத் துறை அமைச்​சகம் பரிசீலனை செய்​து​வரு​கிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்​னை​யில் முக்​கிய இணைப்​பான விமான நிலை​யம் - கிளாம்​பாக்​கம் பேருந்து நிலையம் இடையி​லான, மெட்ரோ ரயில் விரி​வாக்​கத் திட்​டத்​தில், மத்​திய அரசின் ஒப்​புதலைப் பெற தொடர்ந்து முயற்சி மேற்​கொள்​ளப்​படு​கிறது.

இத்​திட்ட அறிக்​கையை மத்​திய நகர்ப்​புற மேம்​பாட்டு அமைச்​சகம் பரிசீலித்து வரு​கிறது. மேலும், மற்ற துறை​களு​ட​னும் மத்​திய அரசு ஆலோ​சிக்​கிறது. எனவே, இத்​திட்​டத்தை செயல்​படுத்​து​வதற்​கான மத்​திய அரசின் ஒப்​புதல் விரை​வில் கிடைக்​கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT