தமிழகம்

அதிமுக சார்பில் டிச.5-ம் தேதி ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அ​தி​முக சார்​பில் முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் 9-ம் ஆண்டு நினைவு தினம் டிச.5-ம் தேதி அனுசரிக்​கப்​படு​கிறது.

இதையொட்டி சென்னை மெரினா கடற்​கரை​யில் உள்ள அவரது நினை​விடத்​தில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மரி​யாதை செலுத்​துகிறார்.

இது தொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: புரட்​சிகர​மான பல்​வேறு திட்​டங்​களால் தமிழக மக்​களின் வாழ்க்​கை​யில் பெரும் மாற்​றங்​களை​யும், எழுச்​சி​யை​யும் ஏற்​படுத்​திய முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் புகழ் காலமெல்​லாம் நிலைத்​திருக்​கும்.

தன்​னலம் கரு​தாது, தமிழக மக்​களுக்​காகப் பாடு​பட்ட ஜெயலலி​தாவுக்கு புகழ் அஞ்​சலி செலுத்​து​வது ஒவ்​வொரு அதி​முக​வினரின் இன்​றியமை​யாத கடமை​யாகும்.

அந்த வகை​யில் 9-வது ஆண்டு நினைவு நாளான டிச.5-ம் தேதி, காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்​கரை​யில் உள்ள ஜெயலலிதா நினை​விடத்​தில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மலர்​வளை​யம் வைத்​து, மலர்​தூவி மரி​யாதை செலுத்​துகிறார்.

அதையடுத்து எம்​ஜிஆர், ஜெயலலிதா நினை​விட நுழை​வாயி​லின் உள் பகு​தி​யில் உறு​தி​ மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை​பெறுகிறது அதி​முக​வின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்​வாகி​கள் தொண்​டர்​கள், அனைத்து பகு​தி​களி​லும் ஜெயலலி​தா​வின் படங்​களை வைத்து மாலை அணி​வித்​து, மரி​யாதை செலுத்தி அவரது நினை​வைப் போற்ற வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT