தமிழகம்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: மாவட்ட ஆட்​சி​யருக்கு அநீதி இழைத்த தவெக எம்எல்ஏ அருள் விக்​னேஷை கண்​டித்​தும், அவர் மீது நட​வடிக்கை எடுக்​காதது மற்​றும் பெண்​கள் மற்​றும் சிறுமிகளுக்கு பாது​காப்பு அளிக்​காத தவெக அரசைக் கண்​டித்​தும் அதிமுக சார்​பில் கள்​ளக்​குறிச்​சி​யில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. அக்​கட்​சி​யின் மாவட்​டச் செய​லா​ளர் குமரகுரு தலைமை வகித்​தார். முன்​னாள் அமைச்​சர் வளர்​மதி கண்​டன உரையாற்​றினார். அப்​போது அவர் பேசிய​தாவது:

கள்​ளக்​குறிச்சி எம்​எல்ஏ அருள் விக்​னேஷ் செய்​ததை, ‘தவறு’ என்று முதல்​வர் விஜய் சொல்​ல​வும் இல்லை; கண்​டிக்​கவும் இல்லை. இந்த சம்​பவத்தை கேள்​விப்​பட்டு பல அமைப்​பு​கள் கண்​டனம் தெரி​வித்​தன. இதையெல்​லாம் முதல்​வர் பார்த்​திருப்​பார். ஆனால், மாமல்​லபுரத்​துக்கு எம்​எல்ஏ அருள் விக்​னேஷை அழைத்து பேசி​யிருக்​கிறார்.

ஆட்​சி​யருக்கு குறுஞ்​செய்தி அனுப்​பியதை கண்​டிக்​காமல், அவருக்கு பட்டு வேட்டி கொடுத்து அனுப்​பு​கிறார். ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோர் முதல்​வ​ராக இருந்​திருந்​தால், ‘எங்க வீட்​டுப் பிள்ளை’ படத்​தில் நம்​பியாரை எம்​ஜிஆர் சவுக்​கால் வெளுப்​ப​துபோல் அந்த எம்​எல்​ஏவை வெளுத்து வாங்கி அனுப்பி இருப்​பார்​கள்.

சட்​டப்​பேரவைத் தேர்​தலின்​போது, ‘234 தொகுதி​களி​லும் நான்​தான் வேட்​பாளர், எனக்கு வாக்கு அளி​யுங்​கள், என்ன தவறு நடந்​தா​லும் நான்​தான் பொறுப்பு’ எனக் கூறிய​வர் முதல்​வர் விஜய். ‘என்னை நம்​பித்​தான் மக்​கள் வாக்​களித்​துள்​ளனர்’ என்று கூறினார். கள்​ளக்​குறிச்சி தவெக எம்​எல்​ஏவுக்கு மக்​கள் வாக்​களித்​தது, ஆட்​சி​யருக்கு குறுஞ்​செய்தி அனுப்​புவது​வரை சென்​றுள்​ளது.

‘எனக்கு விழுந்த வாக்கு, என்​னைப் பார்த்து விழுந்த வாக்கு’ என்று நீங்​கள்​தானே சொன்​னீர்​கள் முதல்​வரே, உங்​களைப் பார்த்து விழுந்த வாக்கு என்​றால், இப்​படிப்​பட்ட தவறை செய்த உங்​கள் கட்சி எம்​எல்ஏ மீது நட​வடிக்கை எடுங்​கள். இல்​லா​விட்​டால் நீங்​கள் ராஜினாமா செய்​யுங்​கள். இவ்​வாறு வளர்​மதி பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT