சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், நிறைவடைய 2 நாட்கள் உள்ளன.
ஏப்.2-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. ஏப்.19-ல் சேலத்தில் நிறைவு செய்கிறார்.
இதனிடையே அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களான காளியம்மாள், நடிகர் ரவி மரியா இன்று பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.
அதிமுக செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம் நாளை (ஏப்.5) முதல்21-ம் தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, ஈரோட்டிலும், வைகைச்செல்வன் ஏப்.6 முதல் 21-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும், கொள்கைப்பரப்பு துணை செயலாளர் நடிகை கவுதமி ஏப்.8 முதல் 21-ம் தேதி வரையும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.