சென்னை: ‘அதிமுக எம்.பி இன்பதுரை வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: கட்சித் தாவல் தடை சட்ட புகாருக்கு ஆளாகிய ஒருவரை தகுதி நீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டத்தின் 10-வது அட்டவணை பேரவைத் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது.
அவ்வாறு புகாருக்கு உள்ளானவரை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் முன், சட்டப்பிரிவு 163-ன்படி முதல்வரிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்தி அடைவது அவசியம்.
விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அதை எதிர்கொள்ளும் நபர் அமைச்சராக இருந்தால் சட்டப்பிரிவு 142 வழங்கும் சிறப்பு அதிகாரம் மூலம் உச்சநீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யலாம்.
மணிப்பூர் மாநில அமைச்சர் தனாவோஜம் ஷ்யாம் குமார் சிங் வழக்கில் 2020-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதற்கு நல்ல உதாரணம்.
எனவே, எல்லா நிலைகளிலும் அரசியலமைப்புச் சட்டமே மேலோங்கி நிற்கும். இதுதான் நமது அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.