தமிழகம்

அதிமுக பொது செயலாளர் பழனிசாமி 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம்

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வரும் டிச.28, 29 மற்​றும் டிச.30 ஆகிய தேதி​களில் திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மற்​றும் சென்னை புறநகர் மாவட்​டங்​களில் தேர்​தல் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளவுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அதிமுக பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற தலைப்​பில், தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரு​கிறார்.

இந்நிலையில் வரும் டிச.28-ம் தேதி முதல் டிச.30 வரை திரு​வள்​ளூர், சென்னை மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் சுற்​றுப் பயணம் மேற்​கொள்​ள உள்​ளார்.

அதன்​படி, வரும் டிச.28 அன்று அதிமுக திரு​வள்​ளூர் மேற்கு மாவட்​டத்​தில் திருத்​தணி மற்​றும் திரு​வள்​ளூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும், டிச.29 அன்று செங்​கல்​பட்டு கிழக்​கு, சென்னை புறநகர் மாவட்​டங்​களில் திருப்​போரூர் மற்​றும் சோழிங்​கநல்​லூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும், டிச.30 அன்று திரு​வள்​ளூர் வடக்கு மாவட்​டத்​தில் கும்​மிடிப்​பூண்டி தொகு​தி​யிலும் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ள​விருப்​ப​தாக அதிமுக தலை​மைக்​கழகம் சார்​பில் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT