தமிழகம்

ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் 6 பேர் மீது நடவடிக்கை: சட்டப்பேரவைத் தலைவர் உறுதியளித்ததாக அதிமுக நிர்வாகிகள் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று பேர​வைத் தலை​வர் உறுதி அளித்​துள்​ள​தாக தளவாய் சுந்​தரம், அக்ரி கிருஷ்ண​மூர்த்தி ஆகியோர் தெரி​வித்​தனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகரை, அதி​முக எம்​எல்​ஏ.க்​கள் தளவாய் சுந்​தரம், அக்ரி கிருஷ்ண​மூர்த்தி ஆகியோர் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று சந்​தித்​தனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது: அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்ற சி.​விஜய​பாஸ்​கர், இசக்கி சுப்​பையா உள்​ளிட்ட 6 எம்​எல்​ஏக்​கள் கட்​சிக்​கும், தொகுதி மக்​களுக்​கும் துரோகம் செய்​து​விட்​டு, குதிரை பேரத்​தின் மூல​மாக ஆளுங்​கட்​சி​யில் இணைந்​தனர்.

இவர்​கள் மீது கட்​சித் தாவல் தடைச் சட்​டத்​தின்​படி நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று ஏற்​கெனவே நாங்​கள் பேர​வைத் தலை​வரிடம் புகார் மனு அளித்​திருந்​தோம். அந்த புகார் மனு​வின் மீது சில விளக்​கங்​களை பேர​வைத் தலை​வர் கேட்​டிருந்​தார்.

அதாவது, அதி​முக சட்​டப்​பேர​வைக்​குழு தலை​வர், கொறடா எப்​போது தேர்வு செய்​யப்​பட்​டனர்? இதற்​கான கூட்​டம் எங்கே நடை​பெற்​றது உள்​ளிட்ட சில விவரங்​கள் கேட்​கப்​பட்​டிருந்​தன. சட்​டப்​படி கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர்​தான் கொற​டாவை நியமிக்க வேண்​டும்.

அதன்​படி சட்​ட​வி​தி​களுக்கு உட்​பட்​டு​தான் நியமனம் நடை​பெற்​றது. இந்த விவரங்​களை தொகுத்து பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வழங்​கிய விளக்​கக் கடிதத்தை பேர​வைத்தலை​வரிடம் கொடுத்​தோம். விரை​வில் கட்​சித் தாவல் தடைச் சட்​டத்​தின்​படி நடவடிக்கை எடுப்​ப​தாக உறுதி அளித்​திருக்​கிறார்.

அதி​முக எம்​எல்​ஏ.க்​களிடம் வெற்​றுத்​தாளில் கையெழுத்து வாங்​கிய​தாகக் கூறு​வது தவறு. யாரும் வெற்​றுத் தாளில் கையெழுத்து போட​மாட்​டார்​கள்.

கொற​டா​வின் உத்​தரவை ஒரு எம்​எல்ஏ மீறி​னால் அவர் மீது நடவடிக்கை எடுப்​பது​தான் சட்​டம். சொந்த விருப்​பத்​தின் அடிப்​படை​யில் ராஜி​னாமா செய்ததாகக்கூறுகிறார்​கள். அதற்​கான காரணங்​களை விளக்க வேண்​டும்.

பேரவை தலைவர் மீது நம்பிக்கை

தமிழ்​நாடு சட்​டப்​பேரவை விதி​களின்​படி கட்​சிகள் வழங்​கும் நபர்​களைத்​தான் கொறடா போன்ற பதவி​களுக்கு பேர​வைத் ​தலை​வர் தேர்வு செய்ய வேண்​டும். பேர​வைத் தலை​வர் சட்ட விதி​களுக்​குட்​பட்டு செயல்​படு​வார் என்ற நம்​பிக்கை உள்​ளது.

எம்​எல்​ஏ.க்​கள் வில​கிய​தால் அதி​முக பலவீனப்​பட​வில்​லை. கட்​சியை பலப்​படுத்​தும் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT