அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், இரும்புலியூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவருக்கு நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர்.

 
தமிழகம்

தாம்பரம் இரும்புலியூர் அருகே ரயில்வே நடைமேம்பாலம் அமைக்கப்படும்: அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

செய்திப்பிரிவு

தாம்பரம்: ​தாம்பரம் சட்​டப்​பேரவை தொகுதி அதி​முக வேட்​பாளர் சிட்​ல​பாக்​கம் ராஜேந்​திரன் தொகு​திக்கு உட்​பட்ட கிழக்கு தாம்​பரம், இரும்​புலியூர் பகு​தி​களில் வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டார்.

அப்​போது, 62-வது வார்டு கிழக்கு வட்ட செய​லா​ளர் கிருஷ்ண​மூர்த்தி தலை​மை​யில் அந்த பகுதி நிர்​வாகி​கள் சார்​பில், சட்​டப்​பேரவை உறுப்​பின​ராக அமர்​வது போது அவரின் புகைப்​படத்தை நினைவு பரி​சாக வழங்​கி​னார்.

அப்​போது, ராஜேந்​திரன் பேசி​ய​தாவது: கிழக்கு தாம்​பரம் பகு​தி​யில் மினி பேருந்து இயக்கவும், இரும்​புலியூரில் இருந்து ஜிஎஸ்டி சாலைக்கு செல்ல ரயில்வே நடைமேம்​பாலமும் அமைக்​க நடவடிக்கை எடுக்கப்​படும், போதை கலச்​சா​ரத்தை முற்​றி​லும் ஒழிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். அதி​முக ஆட்​சி​யில் கிலோ ரூ.30 விற்ற அரிசி, இன்று ரூ.70க்கு விற்​கிறது.

கட்​டிடம், சொத்​து, குப்​பை, வணி​கம் என அனைத்து வரி​களும் உயர்ந்து விட்​டது. இந்த நிலை​மைக்கு ஆளும் அரசாங்​கமே பொறுப்​பு. திமுக​வின் மோச​மான நிர்​வாக திறமை​யால் விலை​வாசி குறைய​வில்​லை.

அடிக்​கடி மின்​வெட்டு ஏற்படுகிறது. உங்​களு​டைய கஷ்டங்​களில் பங்​கு​கொள்​ளக் கூடிய எனக்கு இரட்டை இலை சின்​னத்​தில் வாக்​களித்து வெற்றி பெற செய்​யுங்​கள்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT