தாம்பரத்தில் அதிமுக வேட்பாளர் சிட்ல​பாக்கம் ச.ராஜேந்​திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 
தமிழகம்

தாம்பரத்தில் அதிமுக, பகுஜன் சமாஜ் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

தாம்பரம்: ​முன்​மா​திரி தொகு​தி​யாக தாம்​பரம் மாற்​றப்​படும் என, அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்​பாளர் சிட்​ல​பாக்​கம் ச.ராஜேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதி​முக வேட்​பாளர் சிட்​ல​பாக்​கம் ச.ராஜேந்​திரன் இரட்டை இலை சின்​னத்​திற்கு வாக்கு கேட்டு நகரம் மற்​றும் கிராமப் ​புறங்​களில் தீவிர பிர​சா​ரம் மேற்​கொண்டார்.

அப்போது, ஆண்​கள், பெண்​கள் என வேறு​பாடு​களின்றி அனைத்து தரப்​பினருக்​கும் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும். தமிழகத்​திலேயே முன்​மா​திரி​யான தொகு​தி​யாக தாம்​பரம் தொகு​தியை மாற்​று​வதற்​கான அனைத்து திட்​டங்​களும் பழனி​சாமி வழி​காட்​டு​தலின் பேரில் நிறைவேற்​றப்​படும்.

கடந்த அதி​முக ஆட்​சி​யில் தொடரப்​பட்ட அனைத்து திட்​டங்​களும் மீண்​டும் தொடரும். பொய் வாக்​குறுதி கூறி ஏமாற்றி ஆட்​சியை பிடித்​தவர்​கள் திமுக. தாம்​பரம் தொகுதி பொது​மக்​கள் அரசு திட்​டங்​களை பெற்று பயனடைய லஞ்​சம் தர வேண்​டிய நிலை உள்​ளது என கூறி இரட்டை இலை சின்​னத்​திற்கு வாக்கு சேகரித்​தார்.

தாம்பரம் மார்கெட் பகுதியில் பிஎஸ்பி வேட்பாளர் ராஜா வாக்கு சேகரித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்

தாம்​பரம் தொகு​தி​யில் போட்​டி​யிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்​பாளர் ராஜா தொகு​திக்கு உட்​பட்ட நகரம், கிராமங்​களில் வீடு வீடாக நடந்து சென்று பொது​மக்​களை சந்​தித்து யானை சின்​னத்​திற்கு வாக்கு சேகரித்​தார்.

தாம்​பரம் மாநக​ராட்​சி​யுடன் இணைய உள்ள இப்​பகு​தி​களில் தான் வெற்றி பெற்று சட்​டப்​பேரவை உறுப்​பினர் ஆனவுடன், இப்​பகு​தி​களுக்கு பாதாள சாக்​கடை திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

மேலும், இப்பகு​தி​களுக்கு பாலாறு மற்​றும் மெட்ரோ குடிநீர் கிடைக்க வழி​வகை செய்​யப்​படும்.

இப்​பகு​தி​யில் உள்ள அரசு பள்​ளி​களின் தரம் உயர்த்​தப்​படும். பள்​ளி​களில் நவீன கழி​வறை​கள் அமைக்​கப்​பட்​டு, அனை​வருக்​கும் தரமான கல்வி உறுதி செய்​யப்​படும். மேலும், கடை வீதி​களில் துண்​டு பிரசுரங்​கள்​ வழங்​கி வாக்​கு சேகரித்​தார்​.

SCROLL FOR NEXT