செம்மலையை துண்டு அணிவித்து வரவேற்ற விஜய்.

 
தமிழகம்

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை

செய்திப்பிரிவு

தாராபுரம்: ​தா​ராபுரத்​தில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் முதல்வர் விஜய் முன்​னிலை​யில் அதி​முக முன்​னாள் அமைச்​சர் செம்​மலை தவெக​வில் இணைந்​தார். அவருக்கு முதல்​வர் விஜய் துண்டுஅணி​வித்து வரவேற்​றார்.

அதி​முக​வின் மூத்த தலை​வர் செம்​மலை, மறைந்த முன்னாள் முதல்​வர் ஜெயலலிதா அமைச்​சர​வை​யில் கடந்த 2001 முதல் 2004 வரை​ அமைச்​ச​ராகப் பதவி வகித்​துள்​ளார். 4 முறை சட்​டப்​பேரவை உறுப்​பின​ராக​வும், ஒருமுறை மக்​களவை உறுப்​பின​ராக​வும் இருந்​துள்​ளார்.

கட்​சி​யில் நடை​பெற்று வரும் சம்​பவங்​கள் தனக்கு மனவேதனையை ஏற்​படுத்​தி​ய​தாக தெரி​வித்​திருந்த நிலை​யில், கடந்த மே மாதத்​தில் அதி​முக​வின் அடிப்​படை உறுப்​பினர் உள்​ளிட்ட அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் வில​கு​வ​தாக செம்​மலை அறி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், தாராபுரம் இடைத் தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக வந்த முதல்​வர் முன்​னிலை​யில் தன்னை தவெக​வில் இணைத்​துக் கொண்​டார்.

SCROLL FOR NEXT