இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி ‘காதுகுத்து விழா’ அழைப்பிதழுடன் பேரவைக்கு வருகை தந்து கவனம் ஈர்த்தனர் அதிமுக உறுப்பினர்கள்.படம்: ம.பிரபு

 
தமிழகம்

“பட்ஜெட் அல்ல... காது குத்து விழா” - அழைப்பிதழுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள்

செய்திப்பிரிவு

தமிழக சட்​டப்​பேர​வைக்கு வருகை தந்த அதி​முக எம்​எல்​ஏக்​கள் ஒவ்​வொரு​வ​ரும் தங்​களது கைகளில், தமிழக அரசின் பட்​ஜெட்டை விமர்​சிக்​கும் வகை​யில் ‘மாபெரும் காது குத்து விழா’ என்ற தலைப்​புடன் கூடிய அழைப்​பிதழ்​களை சட்​டப்​பேர​வைக்கு கொண்டு வந்​திருந்​தனர். தமிழக அரசின் பட்​ஜெட்டை நூதன​மாக விமர்​சிக்​கும் வித​மாக அதி​முக​வினர் கொண்டு வந்த ‘காது குத்து விழா’ அழைப்​பிதழ், அங்​கிருந்த அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்​தது.

அதில், “கடந்த நான்​கரை ஆண்​டு​களாக பட்​ஜெட் என்​னும் பெயரில் தமிழக மக்​களுக்கு நடத்​தப்​படும் மாபெரும் காது குத்​தும் விழா, இந்த வருட​மும் வெகு விமரிசை​யாக நடை​பெற உள்​ளது. இவ்​விழாவுக்கு தலைமை தாங்​குபவர் முதல்​வர் மு.க. ஸ்டா​லின். முன்​னின்று காது குத்​துபவர் நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு.

          

விழா​வில் கூவம் சுத்​தி​கரிப்​புக்கு நிதி, சென்னை மழைநீர் வடி​கால் திட்​டத்​துக்கு நிதி, சிங்​கார சென்னை திட்​டத்​துக்கு நிதி என்று வித​வித​மாக காது குத்​தப்​படும் என்று மகிழ்ச்​சி​யோடு தெரி​வித்து கொள்​கி​றோம். மேலும் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்​ட​ணம் என பல்​வேறு முறை​களில் ‘மொய்’ வைக்​கலாம்.” என்று குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதுதொடர்​பாக சட்​டப்​பேரவை வளாகத்​தில் எதிர்க்​கட்சி தலை​வர் பழனி​சாமி கூறுகை​யில், “கடந்த 5 ஆண்​டு​களாக தமிழக மக்​களை வாட்டி வதைத்த ஏமாற்று மாடல் அரசு தனது கடைசி பட்​ஜெட்டை பேர​வை​யில் தாக்​கல் செய்​துள்​ளது. இந்த அரசு மக்​களுக்கு எந்த அளவுக்கு காது குத்​துகிறது என்​பதை நாட்டு மக்​கள் அறிய​வேண்​டும் என்​கிற வகை​யில் ‘காது குத்​தும் விழா’ அழைப்​பிதழை சட்​டப்​பேர​வை​யில் அனை​வ​ருக்​கும் வழங்​கினோம்” என்று தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT