பசும்பொன்னில் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்ட தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன் மற்றும் தர்மர் எம்.பி. உள்ளிட்டோர்.

 
தமிழகம்

பசும்பொன்னில் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் தங்கக் கவசம் அணிவிப்பு

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழா அக். 30-ம் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி, அதிமுக சார்பில் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட 13 கிலோ எடையுள்ள தேவர் சிலைக்கான தங்கக் கவசம் நேற்று மதுரை அண்ணா நகரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையிலிருந்து ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் எடுத்து வரப்பட்டது.

முன்னதாக, மதுரை வங்கிக் கிளையில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் ஆகியோர் சேர்ந்து கையெழுத்திட்டு தங்கக் கவசத்தை பெற்றனர். பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு தங்கக் கவசத்தை நினைவிட பொறுப்பாளர்கள் காந்திமீனாள் நடராஜன், தங்கவேல், பழனி ஆகியோர் அணிவித்தனர்.

பின்னர், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, தர்மர் எம்.பி., அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன் முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT