தமிழகம்

ஆவணி அவிட்டம், பவுர்ணமியை முன்னிட்டு நாளை பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

செய்திப்பிரிவு

சென்னை: பொது​மக்​களின் கோரிக்​கையை ஏற்று ஆவணி அவிட்​டம், பவுர்​ணமி தின​மான நாளை ஆக.27-ம் தேதி பத்​திரப்​ப​திவுக்கு கூடு​தல் டோக்​கன்​கள் வழங்​கப்​படும் என்று பதிவுத்​துறை தலை​வர் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சுப​முகூர்த்த மற்​றும் விசேஷ தினங்​கள் என கருதப்​படும் நாட்​களில் அதி​கள​வில் ஆவணப் பதிவு​கள் நடை​பெறும் என்​ப​தால் அன்​றைய தினங்​களில் பொது​மக்​களின் கோரிக்​கையை ஏற்று ஆவணப்​ப​திவுக்​காக கூடு​தல் டோக்​கன்​கள் ஒதுக்​கப்​படு​கிறது.

தற்​போது ஆவணி மாதத்​தில் வரும் ஆவணி அவிட்​டம் மற்​றும் பௌர்​ணமி தின​மான ஆக.27-ம் தேதி அதி​கள​வில் பத்​திரப் பதிவு​கள் நிகழும் என்​ப​தால் கூடு​தலாக டோக்​கன்​கள் ஒதுக்​கீடு செய்ய பல்​வேறு தரப்பு பொது​மக்​களிடம் இருந்து கோரிக்​கைகள் பெறப்​பட்​டுள்​ளன.

அதை ஏற்று நாளை, ஒரு சார்​ப​தி​வாளர் உள்ள அலு​வல​கங்​களுக்கு 100-க்கு பதிலாக 150 டோக்​கன்​கள், இரண்டு சார்​ப​தி​வாளர்​கள் உள்ள அலு​வல​கங்​களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்​கன்​கள், அதி​கள​வில் ஆவணப் பதிவு​கள் நடை​பெறும் 100 அலு​வல​கங்​களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்​ப​திவு டோக்​கன்​களு​டன் ஏற்​கெனவே வழங்​கப்​படும் 12 தட்​கல் டோக்​கன்​களு​டன் கூடு​தலாக 4 டோக்​கன்​களும் வழங்​கப்​படும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT