தமிழகம்

சுபமுகூர்த்த தினமான ஆக.31-ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

செய்திப்பிரிவு

சென்னை: சுப​முகூர்த்த தின​மான ஆக.31-ம் தேதி அனைத்து சார்பதிவாளர் அலு​வல​கங்​களி​லும் கூடு​தல் முன்​ப​திவு டோக்​கன்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக பதிவுத்​துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து பதிவுத்​துறைத் தலை​வர் அருண் சுந்​தர் தயாளர் வெளி​யிட்ட அறிக்​கை: ஆவணி மாத சுப​முகூர்த்த தின​மான ஆக.31-ம் தேதி அதிக அளவில் பத்​திரப் பதிவு​கள் நிகழும் என்​ப​தால் கூடு​தலாக முன்​ப​திவு டோக்கன்​கள் ஒதுக்​கீடு செய்​யு​மாறு பல்​வேறு தரப்பு ​மக்​களிடம் இருந்து கோரிக்​கை​கள் வந்​துள்​ளன.

எனவே, ஆக.31-ம் தேதி ஒரு சார்​ப​தி​வாளர் உள்ள அலு​வல​கங்​களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்​ப​திவு டோக்கன்​களும், இரண்டு சார்​ப​தி​வாளர்​கள் உள்ள அலு​வல​கங்​களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்​ப​திவு டோக்கன்​களும், அதிக அளவில் ஆவணப் பதிவு​கள் நடை​பெறும் 100 அலு​வல​கங்​களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்​ப​திவு டோக்கன்​களோடு ஏற்​கெனவே வழங்​கப்​படும் 12 தட்​கல் முன்​ப​திவு டோக்கன்​களு​டன் கூடு​தலாக 4 தட்​கல் முன்​ப​திவு டோக்கன்​களும் ​மக்​களின் பயன்​பாட்​டுக்​காக வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT