பல்லாவரம் அருகே விசிக நிர்வாகி கொலை: தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடும் போலீஸ்

பல்லாவரம் அருகே விசிக நிர்வாகி கொலை: தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடும் போலீஸ்
Updated on
1 min read

தாம்​பரம்: திருநீர்​மலை​யில் விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யின் மாவட்ட தொண்​டரணி அமைப்​பாளர் அன்​பழகனை 6 பேர் கொண்ட கும்​பல் வெட்​டிக் கொலை செய்​து​விட்டு தப்​பிய சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

பல்​லா​வரம் அடுத்த திருநீர்​மலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் அன்​பழகன்​(45). விசிக மாவட்ட தொண்​டர் அணி அமைப்​பாள​ராக பதவி வகித்து வந்​தார். இவர் நேற்று மாலை திருநீர்​மலை அம்​பேத்​கர் சிலை அருகே தனது நண்​பர்​களு​டன் நின்று பேசிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது 3 இருசக்கர வாக​னங்​களில் ஹெல்​மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்​பல், அவரை சரமாரி​யாக வெட்​டிக் கொலை செய்​து​விட்டு தப்​பிச் சென்​றது.

அப்​பகுதி மக்​கள் உடனடி​யாக 108 ஆம்​புலன்​ஸுக்கு தகவல் தெரி​வித்​தனர். ஆம்​புலன்​ஸில் விரைந்து வந்த மருத்​து​வப் பணி​யாளர்​கள் அவரை பரிசோதனை செய்​த​தில் ஏற்​கெனவே இறந்​து​விட்​டது தெரிந்​தது.

தகவலறிந்த சங்​கர் நகர் போலீ​ஸார் அன்​பழக​னின் உடலை மீட்டு குரோம்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​து, வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

முதற்​கட்ட விசா​ரணை​யில் அன்​பழகன் மீது 3 கொலை வழக்​கு​கள் உட்பட பல்​வேறு குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் இருப்​பதும், முன்​விரோதம் காரண​மாக கொலை செய்​யப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இதையடுத்து கொலை செய்​து​விட்டு தப்​பிய 6 பேர் கும்​பலை தனிப்​படை அமைத்து போலீ​ஸார் தேடிவருகின்றனர்.

பல்லாவரம் அருகே விசிக நிர்வாகி கொலை: தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடும் போலீஸ்
திருவள்ளூர் அருகே முகத்தில் ஆசிட் ஊற்றி ஆந்திராவை சேர்ந்த பெண் கொடூர கொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in